மொழி – ஒரு கண்ணோட்டம்
பெங்களுரில் 250 வீடுகள் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாலை நடைபயிற்சியின் சமயம், குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் உரையாடியதும், 3 வயது நிரம்பும் பேத்தி Trampoline Jump செய்கிறேன் என்று சொன்ன வார்தையும் இந்த Blog-க்கு காரணம்.
Trampolineகல்வியுடனும், அறிவுடனும் மிகவும் தொடர்புடையது மொழி.
எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிருக்கு
இக்குறளில் எழுத்து என்பது அனைத்து மொழி எழுத்துக்களையும் குறிக்கும். நம் திறனுக்கு ஏற்றார் போல் நாம் எழுத்தை (மொழியை) அறிந்து கொள்கிறோம்.
கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர்.
தாய்மொழியை தவிற பிற மொழி தெரியாதவர்களும் கண்ணில் புண்ணுடையார் என்பதே என் எண்ணம். இதன் அடிப்படையில் பார்தால் நானும் முகதில் புண்ணுடயவளே. கற்றவர் என்றாலே சில அல்லது பல மொழியறிந்தவராக இருப்பர்.
மொழி அறிவு என்றால் என்ன?
பேசுதல், படித்தல், எழுதுதல் என்று மொழியறிவை மூன்று நிலையாக பிரித்தாலும, எழுதும் திறன் கொண்டவர்களே அதிக மொழித்திறன் கொண்டவராவர். மொழியை பேச தெரிந்தவர்களே அதிகம் இருப்பர், எழுத படிக்க தெரிந்தவர்களைவிட.
பல மொழி பேசுபவர்கள்.
மிகஒருசிலரே ஆர்வத்துடன் கற்று மொழியறிவை பெறுகின்றனர். ஆனால் மொழியின் வளர்ச்சிதிறன் குறைவாகதான் இருக்கும். அன்றாட பயன்பாட்டின் அடிப்படையிலேயே வளர்ச்சியிருக்கும்.
வாய்ப்பு
பலருக்கு இது ஒருவகையான யோகம் என்றே சொல்ல வேண்டும். பிற மாநிலத்தில் (நாடு) வசிக்கும் வாய்ப்பு, மாநிலத்தின் எல்லைபகுதியில் வசிக்கும் வாய்ப்பு, பிற மொழி பேசுபவர்களை திருமணம் செய்பவர்கள், பிற மொழி பேசுபவர்களுடன் பணியாற்றுபவர்கள். இதில் சிலர் விருப்பத்திற்கேற்ப மொழயறிவை வளர்த்துக்கொள்கின்றனர். எனக்கு இந்த யோகம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் வாழ்நாள் முழுவதும் மனதில் இருக்கும்.
தாய்மொழி நிலை.
அனைத்து விண்ணப்ப படிவத்திலும், மொழி, ஜாதி, மதத்திற்கு தனிஇடம் (தாய்மொழி) ஒன்று இருக்கும். சட்டத்தின் அடிப்படையில் தாயின் மூலம் வரும் மொழி தாய் மொழி என்றும், தந்தை மூலம் வருவதே மதம் என்றும் நாம் படிவத்தை பூர்த்தி செய்வோம். காலப்போக்கில், தாய்மொழி என்று குறிப்பிடப்படும் மொழியில், அந்த மொழி பற்றிய மழுமையான அறிவில்லாமல் உள்ள நிலை ஏற்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டுபெண்ணின் மகன் தமிழ் மொழியை பேசினாலும், வடஇந்தியாவில் வாழ்ந்தால் ஹிந்தி மொழியையே நன்கு அறிந்துள்ளார். பெயரளவிற்கு பேசப்பட்டாலும் , படிக்க, எழுத அவர்களுக்கு தெரிவதில்லை. தவறான செய்தியை படிவத்தில் பூர்த்தி செய்வது, தவறாகும் என்ற எண்ணமே எனக்கு தோன்றும். தாய் மொழி என்ற பகுதியை அகற்றிவிட்டு, வாழ் மொழி அல்லது அறிந்த மொழிகள் என்று மாற்றும் நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் வேண்டுமானால், தாய்மொழி (பகுதிவாரிய கணக்கெடிப்பிற்கு உதவும்)என்ற பகுதியை பயன் படுத்திகொள்ளலாம் என்று எனக்கு தோன்றும்.
பாரதியின் வாக்கியம்.
“மெல்ல தமிழ் இனி சாகும்” இவர் தமிழ் கவிஞர் இதன் காரணமாக தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை அனைத்து வட்டார மொழிகளுக்கும் பொருந்தும்.இதை ஏற்க்கொள்ளும் மனநிலை இல்லை என்றாலும், உண்மை இதுவாகவே இருக்கும். ( இங்கு தழிழ் என்று குறிப்பிடுவது ஒரு உதாரணம்) கூகுளில் நாம் தமிழ் மொழியில் தேடுவதை வைத்தே தமிழ் பக்கங்கள் அதிகம் உள்ளன. இதை வைத்து கொண்டு தமிழ் நல்லநிலையில் உள்ளது என்று எண்ண கூடாது. தேடுபவர்கள் யார்? யார்? என்று அறியவேண்டும். தேடுபவர்களின் வயது என்ன? தேடுபவர்களுடைய பிற மொழி அறிவு என்ன? தேடுவதன் நோக்கம் என்ன? இது போன்ற தேடுதல் அடிப்படையிலேயே மொழியின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை உணரலாம்.
மொழி - வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கு காரணமாகும் மக்கள்.
கிராமிய மக்கள்.
கிராமபுறங்களில் இருப்பவர்கள் மற்றும் படிப்பவர்களுக்கு வட்டார மொழியின் அறிவு சற்று கூடுதலாகதான் இருக்கும். கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக, ஆங்கிலவழி கல்லி அதிகரித்ததும் வட்டார மொழியின் பயன்பாடு குறைவதற்கு காரணமாக உள்ளது.
பொருளாதாரம் மற்றும் மொழிவளர்ச்சி
பொருளாதாரத்தில் மேன்மையுடையவர்கள், பெரும்பாலும் வட்டார மொழியைவிட அயல்நாட்டு மொழியையே அதிகம் பேசுகிறார்கள். இதை கௌரமாக நினைக்கிறார்கள். ஏன்? உடலில் ஏற்படும் நோய்கூட பணம்உள்ளவர்கள் மற்றும் கௌரவம் பெருமை இவற்றின் அடிப்படையில் சொல்லப்படுகிறது.
பணம் படைத்தர்வகள் ஆங்கிலவழி கல்வியையே நாடுகின்றனர். பொருளாதரவளச்சியும் வட்டார மொழி பயன்பாடு குறைய காரணமாக இருக்கிறது. (ஒன்றின் வளரச்சி மற்றொன்றின் அழிவு- இயற்கைநியதி)
கைபேசியின் பயன்பாடு.
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்ப பலரும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். காரணம் பயன்பாடு எளிது. (இதுகூட பலருக்கு ஆங்கிலமொழி வளர்ச்சிக்கு உதவியுள்ளது) ஆங்கிலம் அறியாதாவர்கள்கூட வட்டார மொழி விசைபலகையை பயன்படுத்தாமல் Transliteration (ஒருமொழியை வேறுஒரு மொழியின் எழுத்துகளை பயன்படுத்தி எழுதுவது) பயன்படுத்துகின்றனர். இது மொழியை வளர்குமா? ஆழிக்குமா என்ற சிந்தனையை பலமுறை என்ன தூண்டியுள்ளது.
உயிர்மெய்எழுத்துக்கள் ( 18 எழுத்து அழிந்துவிட்டது)
கௌ, ஙௌ என்ற வரிசையை தற்பொழுது யாருமே பயன்படுத்துவதில்லை. உதாரணம்.
1.கௌதமி – நடைமுறையில், கவுதமி என்று எழுதுகின்றனர்
2. மௌலிவாக்கம் - மவுலிவாக்கம் என்றானது
3.ஒளவையார் - அவ்வையார்.
4.கௌரவம்- கவுரவம். என்றானதால் 18 கூட்டல் ஒன்று ஒள சேர்த்து 19 எழுத்துக்கள் மறைந்துவிட்டன.
என்போன்று 50வயது மேற்பட்டவர்களின் இளமை காலத்தில் வீட்டிற்க்குவரும் பெரியவர்கள் புத்தகத்தில் உள்ள ஒளவையார் என்ற சொல்லை காட்டி படி என்பர் திணறினால், இது ஒளவையாரா? ஓளவையாரா? என்று கேட்பர். இந்த நகைச்சுவையை இக்காலமக்கள் ரசிக்கமுடியாது. (குரல்பதிவிடுகிறேன்)PTT-20241114-WA0016
குழந்தை வளரப்பில் கார்டூன் பயன்பாடு.
எனக்கு தெரிந்து கார்டூன் வெளியீடு 10 ஆண்டுகளாக மிக அதிகமாக உள்ளது. கார்டூன் மூலம் ஆங்கிலம் மிக எளிதாக, அதிகமாக கற்கும் வாய்புள்ளது. வட்டார மொழி கார்டூன் வெளியீடு இருந்தாலும், ஆங்கில கார்டூன் போன்று கவர்சியாக இல்லை. குழந்தை வளர்பில், கார்டூனின் பங்கு மிக பெரியது. நிச்சயமாக, வட்டார மொழி சரிவு சிறிது ஆண்டுகளில் மிக அதிகமாக இருக்கும்.
வெளிநாட்டு கம்பெனி வேலைவாய்ப்பும், மொழி அழிவிற்கு பெரும் பங்கு வகிக்கிறது.
மொழி, உறவு, கலை, நல்ல பழக்கங்கள் மற்றும் செயல்கள் அனைத்துமே, அன்றாட வாழ்வில் பின்பற்றினால் மட்டுமே, நிலைத்தன்மையும், வளர்சியும் கிடைக்கும்.
No comments:
Post a Comment