பாலாறு வடகரை மற்றும் தென்கரை திருத்தலங்கள்.(தரிசனநாள்-24.10.2024)
ஒருநாள் தலயாத்திரை
“நால்வரின் பாதையில்”; என்ற ஆன்மீக சுற்றுலா நிறுவனர் திரு. சுரேஷ்பிரியன் அவர்கள், மாதந்தோரும், இறுதிஞாயிற்றுக்கிழமை, பலராலும் நன்கு அறியபடாத, மிக பழமையான, கோவில்களுக்கு அழைத்துசெல்கிறார். இவர் சென்னையில் வசிப்பதால், சென்னை மாநகரை சுற்றியுள்ள கோவில்களே பெரும்பாலும் ஒரு நாள் தலயாத்திரையாக அமைக்கிறார். நம்கோவில்கள் பாதுகாக்கப்படவேண்டும், இளையதலைமுறையினருக்கு இக்கோவில் சிறப்புகள் தெரியப்படுத்த வேண்டும். அர்சகர்கள் பணிதொடர உற்சாகமூட்ட வேண்டும் என்பதே இதன் அடிப்படையான உயர்ந்த நோக்கம்.
இந்த 35வயது இளைஞர் வாரநாட்களில் அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் இதை ஒரு அறப்பணியாக செய்து வருகிறார். அனைவரையும் அம்மா அய்யா என்று அழைக்கும் போது நாங்கள் பெற்ற மகன் தலயாத்திரை அழைத்து செல்வது போன்ற மகிழ்சியை எனக்கும் என்கணவருக்கும் ஏற்படுத்தும். நாங்கள் சென்னையில் இருக்கும் சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறோம்.
1.குணம்தந்தநாதர் - ஓரக்காட்டுப்பேட்டை.
2.பூமிநாதர்- விச்சூர்.
3. திருவாலீஸ்வரர்- திருவாணைக்கோவில்.
4. கைலாசநாதர்- தண்டரை.
5. காலீஸ்வரர் - சாதனஞ்சேரி
6. விருபாகீஸ்வரர் - சாதனஞ்சேரி.
7. வெங்கடேசபெருமாள் - திருமுக்கூடல்.
8.ஆதிபுரீஸ்வரர் - திருமுக்கூடல்.
9. லெஷ்மி நரசிம்மர் - பழையசீவரம்.
10. பரசுராமேஷ்வரர் - பாலூர்
11. பதங்கீஷ்வரர் - பாலூர்
12. ஆத்தூர் இந்த ஊரில் “எழில் ஏழானவன்” என்று ஏழு சிவன் கோவில்கள் உள்ளன. நாங்கள்.
அ. பணீஷ்வரர் என்ற கோவிலும்,
ஆ. முக்தீஸ்வரர் என்ற கோவிலையும் தரிசனம் செய்தோம்.
No comments:
Post a Comment