சிலிகா ஏரி (Chilika Lake)



 சிலிகா ஏரி. (பார்வையுற்றநாள்-9,10.4.2023).

ஓடிசா மாநிலத்தில், 64.3கி.மீ. நீளம் கொண்ட உப்பு நீர் ஏரி.  வங்காளவிரிகுடாவை ஒட்டி உள்ளது இந்த ஏரி. பூரி, கஞ்சாம், கோர்த்தா என்ற மூன்று மாவட்டங்களில் இந்த ஏரி விரிந்துள்ளது. இதன்காரணமாக நான்கு வழிகளில் இந்த ஏரியை கண்டுகளிக்கலாம். 

ஏரியின் சிறப்புகள்.

பறவைகள் சரணாலயம், கோவில், காலைஉணவு தீவு போன்றவை. 

கலிங்கர்கள் காலத்தில் சிறந்த வணிக மையமாக விளங்கியது இந்த இடம். 

205 வகையான பறவைகள் பிற நாடுகளில் இருந்தும், 97 வகை பறவைகள் பிற கண்டங்களில் இருந்தும் வருகின்றன. 

சப்படா, பளுகோன், ரம்பா, பர்குல் என்ற இடங்களில் இருந்து இந்த ஏரிக்கு மக்கள் செல்கின்றனர்.

இந்தியாவின் முக்கிய பத்து ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். 

எங்கள் பயண அனுபவம்.

நாங்கள் புபனேஸ்வரில் இருந்து ரம்பா என்ற இடத்திற்;கு இரயிலில் பயணித்தோம். இரண்டுமணிநேர பயணம், இந்த வழிதடம் எரியின் கரையோரத்தில் அமைந்துள்ளதால், ஏரியின் அழகை கண்டு இன்புற இந்த வழியை தேர்ந்தெடுத்தோம். இரண்டு மணிநேர பயணம் என்றாலும் A/C Chair Car Book செய்திருந்தோம். ஆனால் புகைவண்டி மிக அசுத்தமாக காணப்பட்டது, ஜன்னல் கண்ணாடிகள், துடைக்கபடால் இருந்தது எங்களுக்கு மிகுந்த ஏமறாற்றத்தை கொடுத்தது.


ரம்பா ரயில்நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார் போல் நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்தது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒடிசாமாநிலத்தின் O.T.D.C.  யில் தங்கி படகு சவாரி செய்தோம். (தங்கும்அறை, உணவு, படகுசவாரி ஆன்லைன் புக்கிங் வசதி இவைகளுக்கு ஒடிடிசி உதவுகிறது.)

 நாங்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்.

   













No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...