புபனேஸ்வர் ஒருநாள் சுற்று பயணம்.

 புபனேஸ்வர் ஒருநாள் சுற்று பயணம். நாள். – (7.4.2023)

நந்தன்கண்ணன் உயிரியல் பூங்கா.



437 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் 1960 ஆம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டு, 1974-ல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். உலகிலேயே முதன் முதலில் வெள்ளை நிறத்தில், தோலில் கருப்பு நிற கோடு போன்ற ஒரு வகையான புலிஇனத்தை வளர்த்தது இந்த பூங்காவில் தான். இவ்வாறு பல சிறப்புகனை கொண்டது.


பழங்குடியினரின் அருங்காட்சியகம்.




சி.ஆர்.பி. ஸ்கொயர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒடிசாமாநிலத்தில் எத்தனைவகையான பழங்குடியினர் உள்ளனர்? அவர்களின் உட்பிரிவு, அவர்கள் பயன்பாட்டில் உள்ள ஆடை, ஆபரணம், பழக்கவழக்கங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் உருவசிலைகள், அவர்களின் உணவுபழக்கம். உணவுப்பொருட்கள், கைவினைப்பொட்கள், நெய்யும் ஆடைகள் இவைபற்றிய புகைப்படங்கள், கானொளிகள் மற்றும் விற்பனை நிலையமும் உள்ளது. 

கந்தகிரி, உதயகிரி குகைகள்.




புபனேஸ்வரில் இருந்து 7கி.மீ. தொலைவில் உள்ளது. கி.பி. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சமண படுக்கையாகும், இந்த குகை கலிங்க அரசனான கரவேலா என்ற மன்னனால் சமண மத துறவிகள் ஓய்வெடுக்கவும், தியானம், மற்றும் நூல்கற்கும் இடமாக பயன்படுத்த உருவாக்கினார். 117 குகைள் இருந்ததாகவும் தற்பொழுது 33 குகைகள் மட்மே உள்ளதாக அறியப்படுகிறது. தற்பொழுது கந்தகிரி, உதயகிரி என்று அழைக்கப்பட்ட குகைகள், கட்டக் அல்லது கட்டக்கா என்று முன்பு அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டீஸ் அதிகாரி ஒருவரால் இந்த குகைகள் கண்டறியப்பட்டது.

கந்தகிரியில் சமணர்கோவில் மட்டும் இமைந்துள்ளது.

தௌலி. 



 புபனேஸ்வரில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. தயாநதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் கலிங்கபோர் நடை பெற்ற இடமாகும். இந்த போருக்கு பிறகே அசோக சக்ரவர்தி அவரை பௌத்த மதத்தில் இனைத்துகொண்டு, சத்யாகிரக வழியை பின்பற்றதொடங்கினார் என்று வரலாறு கூறுகிறது. 1970 ஆம் ஆண்டு ஜப்பானியர் அமைதிக்காக கட்டிய, புத்த விகாரில் இதுவும் ஒன்று. இது கலிங்க போர் நடந்த இடமாதலால் இந்த அமைதிவிகார் பொருத்தமாக அமைந்துகிட்டது.

லிங்கராஜ் கோவில்.



ஓடிசா மாநில தலைநகர் புபனேஸ்வரில் அமைந்துள்ள மிகவும் புகழ்மிக்கதும் கட்டிடகலையில் மிகவும் சிறப்பானதுமான சிவன் கோவிலாகும். 180 அடி உயரமும், 150 சன்னதிகளை கொண்ட மிக பெரிய கோவிலாகும். சுயம்புலிங்க ஆலையம் 11 நூற்றாண்டில் கட்டப்பட்டது. பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. பல சன்னதிகள் உள்ளே, இறைவன் இல்லாமல் அழிவுற்ற நிலையில் உள்ளது. காலத்தின் கோலம் சக மனிதனின் துன்பத்தையும், இயலாமையையும் வைத்து பணம் செய்யும் மனிதன், இறைவனையும் விட்டுவைக்கவில்லை என்பது இங்கு நன்கு புரிகிறது. கோவிலுக்குள் புகைபடம் எடுக்க அனுமதி கிடையாது. கோவில் வெளிப்புறத்தை மட்டும் புகைப்படம் எடுத்தோம். மிக உயரமான மதிலை கொண்ட  இந்த கோவில். “கலிங்க கலையின் தொட்டில்” என்று  அழைக்கப்படுகிறது.

கேதார கௌரி ஆலையம்.


கேதார கௌரி உடனுறை கேதாரேஸ்வரர். இந்த ஈசன் கோவில், முக்தேஸ்வரர், கோவிலுக்கு மிக அருகிலேயே உள்ளது. இந்த கோவிலும் மிகவும் தொன்மையானது. ஓடிசா மாநிலத்தில்உள்ள (அஷ்டசம்பு) எட்டு ஈசன் கோவிலில் இதுவும் ஒன்று.

ராஜா, ராணி கோவில்.



11நூற்றாண்டை சேர்ந்தது என்றும், மற்ற கோவிலுடன், சமகாலத்தது என்றும் கருதப்படுகிறது. ஒருவகையான Sand Stone –ல் கட்டப்பட்து. இவ்வகையான கல் “ராஜாரணியா” என்று அழைக்கப்படுவதால், ராஜா ராணி என்ற பெயர்பெற்றது. இந்தேஸ்வரா என்று அழைக்கப்பட்ட ஈசன் தற்பொழுது கர்பக்கிரகதில் இல்லை. அதனால், வழிபாட்டு தலமாக இல்லாமல், தொல்லியல் துறையின் சுற்றுலாதலமாக விளங்குகிறது. 

 






No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...