திரிசூலம். தரிசனநாள்(26.3.23).
அமைவிடம்;.
சென்னை-தாம்பரம் நெடுஞ்சாலையில் விமானநிலையம் எதிரே உள்ள சாலையில் ரயில்வேகேட் கடந்து ஒரு கி;மீ. செல்ல வேண்டும். திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதர், ஈசன் கிழக்கு முகமாகவும், அம்பிகை திரிபுரசுந்தரி தெற்கு முகமாகவும் காட்சிதருகின்றனர்.
தலவரலாறு.
பிரம்மன் பிரம்ம தீர்த்தம் என்று பெயரில் குளத்தை உண்டுசெய்து நான்கு வேதங்களுக்கு இடையில் ஈசனை வைத்து வழிபடுகிறார். இந்த வேதங்களே நான்கு மலைகளாக உருமாறியதாக கூறப்படுகிறது. மலைகளுக்கு இடைபட்ட பகுதி “சுரம்” என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக “திருச்சுரமுடையநாயனார்” என்று அழைக்கப்பட்டடார். தற்பொழுது திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டுஅம்பிகை.
வெளிநாட்டவர்களால் கோவில் பொருட்கள் சூறையாடப்பட்டபொழுது அம்பிகையின் கை பின்னமானது, சொர்ணாம்பிகை அர்சகரின் கனவில் வந்து தன்னுடைய சிலையை இறைவன் அருகிலேயே (சிவன் சன்னதிக்குள்ளேயே) பிiதிஷ்டை செய்யுமாறு தெரிவிக்கிறார். இதன்படியே பின்னமாகபட்ட கை தங்கத்தால் பூர்த்தி செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சொர்ணாம்பிகைக்குபிறகு புதியதாக பிரதிஷ்டை செய்யபட்ட அம்பிகையே திரிபுரசுந்தரி அம்பாள்.
தட்சிணாமூர்த்தி.
வலது காலை முயலகன் மீது ஊன்றி இடதுகாலை மடித்து ஸ்ரீவீராசன தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார்.
நாக யக்னோபவீத(பூணூல்) விநாயகர்.
நாகம் சிவன் தலையமர்ந்ததால் ஆணவம் கொண்டது, இதனால் ஏற்பட்ட சாபம் நீங்க, விநாயகர் சாடாட்சரி மந்திரத்தை, உச்சரித்து வழிபட உதவினார். நாகத்தை பூணூலாக மார்பில் அணிந்துள்ளார் விநாயகர். இந்த விநாயர் சிலை சுவரை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சரபேஸ்வரர்.
சுரபம் என்ற பறவையின் இறக்கையில்லாமல், கைகளில், மான் மழு ஏந்தி, நரசிம்மரை பிடித்த கோலத்திலும் உள்ளார். இத்தகைய கோலம் அரிதானது.
No comments:
Post a Comment