அகற்றுதல்.
இந்த வலைப்பதிவின் நோக்கம்.
பூங்காவில் நடைபயிற்சியின் போது தேசியக்கொடி குப்பை போன்று கிடந்தது. (அகற்றும் முறையறியாமல்). தேசியகொடி அவமதிப்பு சட்டம் பற்றி அறிந்துகொள்வோம்.
ஒரு பொருளை (கழிவு, குப்பை) வேண்டாம் என்று அல்லது தேவை முடிந்தது என்று தூக்கிபோடுதல், பிறருக்கு கொடுத்தல், இடம் மாற்றுதல் (பிரதான இடத்தை விட்டு மறைவான இடம் அல்லது வீட்டின் புழக்கடை பகுதியில் போடுதல் இவற்றை நாம் அகற்றுதல் என்று சொல்லுவோம்.
ஓவ்வொரு பொருளை அகற்றுவதற்க்கும் ஒரு முறை உள்ளது. குறிப்பாக சில பொருளை அகற்றுவதற்க்கு சட்டம், மற்றும் வரையரை செய்யப்பட்ட வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக மருத்துவகழிவு, இதற்கு, சட்டத்திற்கு உடபட்ட, வரையறை செய்யப்பட்ட வழிமுறை உள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் டயாப்பர் (Diaper) கூட அகற்வதற்க்கு வழிமுறைகள் உள்ளது.
புகைப்படம். (தேசியக்கொடி குப்பை போன்று)
தேசியகொடி பற்றிய அறியதகவல்கள்.
1. வடிவமைத்தவர் - சுரையாதாப்ஜி அவர்கள்.
2.தேசியகொடி நமது நாட்டின் போர்கொடியாகவும் விளங்குகிறது.
3.வண்ணம், பிரகாசம், அகலம், நீளம், துணியின் அடர்த்தி, (காதி என்ற கைத்தறி துணியினால் மட்டுமே இருக்க வேண்டும);. இவையனைதிற்க்கும் ஒரு கட்டுப்பாடுள்ளது.
4. சர்வதேச முறைக்கு ஏற்றார் போல் 1964 முதல் மெட்ரிக் அளவு முறையாக மாற்றப்பட்டது.
5. 12க்கு குறைவான நெசவாளர்களே இந்த பணியை செய்கின்றனர்.
தேசியகொடி அவமதிப்பு சட்டம் 1971, இரண்டாவது பிரிவின்படி.
1. தேசியசின்னங்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
2. எரிப்பது சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்களுக்கு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். (3ஆண்டுகள் சிறைதண்டனை, அபராதம், மற்று கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
3. அகற்றும் (அகற்றுதல்- இதற்குதான் மேலே உள்ள விளக்கம்.) போது கண்ணியம், மரியாதையுடன் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment