உதயாபூர் -குளிர்கால அனுபவம். ( 12.12.2022 to 12.1.2023)
50 ஆண்டுகளுக்கு மேல், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு, கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 30 நாட்கள் குளிர் கால வாழ்கை மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பல வட மாநிலங்களில் சுற்றுலாவாக சென்று பனியையும் குளிரையும் பார்த்த எனக்கு தினசரி வாழ்கை குளிரில் வாழ்ந்தது, உற்சாகத்தை ஏற்படுத்தியது. 10 நாட்களுக்கு மேல் நாங்கள் கடும் குளிரை சந்தித்தோம்.
பாத்திரம் துலக்குவது, துணிதுவைப்பது, ஏன் குளிப்பது கூட சாதனையாக தோன்றியது. உடல் மேலே விடும் சுடு நீர் பாதத்தை தொடுகையில் குளிர்ந்து விடுகிறது.
நானும் என் கணவரும் 30 நாட்களும் “சூரிய சோறு” ( நிலா சோறு போன்று) சாப்பிட்டோம்.
வீட்டு வேலைகளை முடித்து விட்டு நான் காலை 9.30 மணிக்குதான் என்னுடைய நடை பயிற்ச்சியை துவங்குவேன். கம்பளி சட்டை போட்டுக்கொண்டு அதன் மேல் சால்வை போர்த்திக்கொண்டு வெய்யிலில் நடப்பது சொர்கத்தில் உலாவருவது போன்று இருக்கும்.
“நிழலின் அருமை வெய்யலில் தெரியும்” என்று நாம் சொல்வோம். குளிரின் சுகத்தை நான் வெய்யிலில் ரசித்தேன்.
“ரணக்பூர்” என்ற இடத்தில் உள்ள சமண கோவிலுக்கு குளிர் காரணமாக செல்ல முடியாதது மட்டுமே எனது மன வருத்தம்.
நடைபயிற்ச்சியின் போது நான் எடுத்த புகைப்படம் மற்றும் கானொளிகள்.
சமணர் கோவில்.
கோவர்தணசாகர் லேக்.
நான் தினமும் வழிபட்ட ஓம்காரேஸ்வரர் மந்திர்(கோவில்).
வீட்டு சுற்று சுவரில் உதய்பூர் மக்கள் வரைந்திருந்த படங்கள்.
நம்மூர் காகம் போன்று எங்கும் காணப்பட்ட பறவை. ஆனால் காகம் அந்த ஊரில் இல்லை.
இரண்டு கம்பளி சட்டையே அணிந்து கொண்டிருந்ததால்;, நான் தனியா பேரம் பேசி (எனக்கு ஹிந்தி தெரியாது) வாங்கிய கம்பளி ஆடை.
உதய்பூர் பிரதானசுற்றுலா இடங்களை பற்றி ஒன்பது வலை பதிவு வெளியிட்டுள்ளேன். பதிவு முகவரி. aasanam.blogspot.com
No comments:
Post a Comment