நூற்றாண்டுவிழா அர்பணிப்பு.
நூற்றாண்டு விழா காணும் ஒரு மாமனிதர் பற்றியது இந்த வலைபதிவு. இந்த மாமனிதர் என்னுடைய மாமனார் என்பதே, இதற்கான, அறிமுகம்.
மரியாதைக்கு உதாரணம்.
என்னுடைய மாமனாரும், என்தந்தையும் தூரத்து உறவினர்கள். என்னுடைய அப்பா அவரின் பள்ளி இறுதி படிப்பை முடித்துவிட்டு, தபால் தந்தி துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த, எனது மாமனாருக்கு உதவியாளராக (அவரது வீட்டிலயே) பணிபுரிந்து வந்தார். என்தந்தை, அதிகாரி திரு. கணேசனை விட 18 ஆண்டுகள் சிறியவர். இதன் காரணமாக, எனது தந்தையை பெயர் சொல்லியே அழைப்பார். இவரின் மூன்றாவது மகன், திரு. ராமநாதனுக்கு என்னை, மணம் முடித்தவுடன், சம்மந்திக்கு உரிய மரியாதையுடன், உறவை தொடர்ந்தார். இந்த மரியாதை உதட்டில் இருந்து வருவதல்ல, உள்ளத்திலும் உள்ளது என்பதை நான் அவர் செயல்கள் மூலம் அறிந்திருந்தேன்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், ஜோதிடம், என்று பல துறையிலும் ஆளுமைபெற்றிருந்தார். நேரமேலாண்மை, பக்தி, ஒழுங்கு, உற்சாகம் இவரின் சிறப்பு இயல்புகள்.
நேரமேலாண்மை.
அதிகாலை கண்விழிப்பது, இறைப்பணி, அலுவலகப்பணி, சுயவேலை, வீட்டுவேலை, உணவருந்துவது, படுக்கைக்கு, செல்வது இவையனைத்திலும் 90 சதவிகிதம் ஒழுங்குமுறையை கடைபிடித்துவந்தார்.
பக்தி.
மதசடங்கு செய்வது (சந்தியாவந்தனம்) ,(மூன்று காலமும் ) நாள் மட்டும் அல்லாது காலம் தவறாமலும் செய்து வந்தார்.
80 வயது வரை பௌர்ணமி தினத்தன்று, அவருடைய அலுவல்களை முடித்துவிட்டு வந்து, நீராடி சத்தயநாராயணா பூஜை செய்ய தவறியதில்லை. (இது ஒரு உதாரணம்).
ஒழுங்கு.
செய்திதாள் வாசிப்பது, அவரின் ஆடைகளை துவைத்துகொள்வது, நல்ல நாள்பார்க, கல்வியில் சந்தேகம் இதற்காக யார் இவரை அனுகினாலும், அவர் வேலையை ஒதுக்கிவிட்டு உடனே செய்வார்.
உற்சாகம்.
தீபாவளி போன்று கொண்டாட்டதிலும், கூட்டத்திற்க்கு அஞ்சாமல், புது துண்டு, வேட்டி, சட்டை வாங்குவதில், உற்சாகம் காட்டுவார்.
பூஜா காலங்களில் இறைவனுக்கு, பூ, பழம், தேங்காய் வாங்குவதில் சலிக்கமாட்டரர். (உதாரணம்- விநாயகர் சதுர்த்திக்கு விளாம்பழம் வாங்குவது- ஒரு பழம் கூட சோடை போகாது).
முத்தாய்ப்பு.
பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். நான் அறிந்தது, “ஒளவையாரின், ஆத்திச்சூடியில்”, “ஏற்பது இகழ்ச்சி” “ஐயம் இட்டு உண்” என்ற இரண்டுவாசகமும் முரன்பாடாக உள்ளது என்று அவரின் கருத்தை வெளியிட்டு, பிற தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள் , மற்றும் பேராசிரியர்களின் கருத்தை கேட்க, காகிதத்தில் அச்சடித்து கொடுத்தார். என்னுடைய தந்தையும் பிற தழிழ் ஆர்வலர்களிடமும் இதை கொடுத்தது என்னால் மறக்கமுடியாத சம்பவம் ஆகும். நானும் இதை படித்து என்னுடை கல்லூரி பேராசிரியர்களிடம் காண்பித்து மகிழ்திருக்கிறேன்.
80 வயதில் 100 பக்கங்கள் கொண்ட சுயசரிதை புத்தகம் (38 வருட அலுவலகப்பணி அனுபவம் பற்றியது) ஆங்கிலத்தில் வெளியிட்டது.
சைவ சித்தாந்தம் பட்டைய படிப்பும், இளங்கலை வணிகவியலும் தொலைதூர கல்வியில் படித்தது.
22 ஆண்டுகள் நான் இவர்களுடன் சேர்ந்து வாழ்ந்ததில் பெருமையும், சில நற்பண்புகள் கற்றதை மகிழ்சியுடன் நினைவு கூறுகிறேன்.
No comments:
Post a Comment