ஓடிசா மாநில சுற்றுப்பயண தொடர்ச்சி. (நாள்- 11.4.2023).
சிருலி மகாவீர் ஆஞ்சநேயர்.
ஓடிசா மாநிலம், பூரியிலிருந்து, வடகிழக்கே 33 கி.மீ. தொலைவில் உள்ளது. பூரி மாவட்டத்தின் ஆன்மீகச்சுற்று பயணத்தில் ஒரு சிறந்த இடத்தை சிருலி பிடிக்கிறது. ஒரே கல்லினால்லான, 10அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் உடல் முழுவதும், செந்தூரம் பூசிக்கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அஞ்சநேயருடைய முகம் சற்று சாய்ந்தது போல் உள்ளது. இடதுபக்க கண் பூரி ஜெகநாதரையும், வலது கண் இலங்கையையும் பார்பதாக மகள் கருதுகின்றனர். சங்கராந்தி, ராமநவமி, தோலோ பூர்ணிமா போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ரகுராஜ்பூர்.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமம். "பட்டசித்ரா” என்ற ஒவியம் வரையும், கலைஞர்கள் வாழும் இடமாகும்.
இந்த பட்டசித்ரா ஒவியம் கி;மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கலையாகும்.
ஓடிசா மாநிலத்தின், பாரம்பரிய நடனமான ஒடிசியின் முன்னோடி நடன கலையான “கோட்டிபுவா” என்ற நடனத்திற்காக பத்மபூஷன் விருதுவாங்கிய கலைஞர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்.
இங்கு நடன பயிற்ச்சி பட்டரையும் உள்ளது.
பூரி ஜெகநாதர் தேரோட்ட விழாவின் தேரோட்டத்தில், “பட்டாஸ்” என்ற பாரம்பரிய அலங்காரம் இந்த ஊர் மக்களால் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் சிறப்பு.
சந்திரபாகா கடற்கறை.
ஓடிசாமாநிலம், பூரி மாவட்டம், கோனார்க் சூரிய கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. நீலக்கொடி சான்றிதழ் (சுற்றுசூழலுக்கு உகந்த தூய்மையான கடற்கரை) பெற்ற, இந்தியாவின் முதல் இடத்தை பிடித்த கடற்கரையாகும்.
பிப்லி. (Pipili)
பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், அப்லிக் (Applique Handicrafts) என்ற கைவினை பொருளுக்கு மிகவும் புகழ்பெற்றதாகும்.
இவ்வகையான கைவினையை நம் தமிழ் நாட்டில் தேரில் தொங்கவிடும் அலங்கார பொருளான “தொம்பை” என்று கூறுகிறோம். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதி தெருவில் தையல் கலைஞர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த தொம்பையை ( Hanging Decorations) தற்காலத்தில் விமானநிலையம், மற்றும் பணம் படைத்தவர்கள் வீடுகளில் அலங்காரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment