கோனார்க்.(Konark)

 கோனார்க்.(Konark) 11.4.23


ஓடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர். உலக புகழ்மிக்க பாரம்பரியமான சூரியக் கோவில் இங்குள்ளது. சூரியனுக்கான கோவில் மிகக்குறைவு. குஜராத் மாநிலம், மோதேரா (Modhera) மற்றும் காஷ்மீர் மாநிலம் மார்டண்ட் (Martand) கோவிலை விட கோனார்க் (Konark) சூரிய கோவிலே முதன்மையானது.


1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ Heritage ஆக அறிவிக்கப்பட்டது. சூரியக் கடவுள் என்பதால் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. பிரதான வாயிலில் சூரியக்கதிர் விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. “சூரியனின் தேர் பூட்டிய குதிரை” போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டுவரிசையாக 12 சக்கரங்கள் கொண்டு மொத்தம் 24 சக்கரங்கள் உள்ளன. அவை ஒரு நாளை குறிக்கிறது. 


பண்டைய வெளிநாட்டு மன்னர்கள் முதல் ஆங்கிலேய ஆதிக்கம் வரை பல வகையலும் இக் கோவில் சூறையாடப்பட்டது. அழிவின் வெளிப்பாடு நன்கு தெரிகிறது. நம் நாட்டின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.


 










No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...