ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் என்ற சிங்கப்பெருமாள் கோவில். (தரிசனநாள்-27.5.2023).
அமைவிடம்.
சென்னை, செங்கல்பட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர், அகோபிலவல்லி தாயாருடன் 1200 ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
கோவில்அமைப்பு.
மலையை குடைந்து பிருமாண்டமாக நரசிம்மர் சிலை வடித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் நரசிம்மர். மூன்று கண்களுடன் காட்சி கொடுக்கும் நரசிம்மரை, பட்டாச்சாரியார் தீப ஆராதரனயின் சமயத்தில் மட்டும் தரிசிக்கமுடியும். நெற்றியில் உள்ள நாமத்தை தூக்கி தீபாராதனை காட்டும் நேரத்தில் பட்டாச்சாரியார் பக்தர்கள் தரினத்திற்காக இக்காட்சியை விளக்குகிறார். ரதசப்தமியன்று சூரிய கதிர் இறைவன் பாதத்தில் விழுகிறது.
புராணம்.
நரசிம்ம அவதாரகாலத்தில் இந்த இடத்தில் ஜாபாலி என்ற முனிவர் கடும் தவம் செய்துவந்தார். ஒருநாள் அந்தி பொழுது பிரதோஷகாலத்தில் நரசிம்மர் முனிவருக்கு காட்சி கொடுக்கிறார். முனிவர் இத்தலத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்புரிய இறைவனிடம் வேண்டுகிறார். அன்று முதல் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மராக இங்கு வீற்றிருக்கிறார். ஊர் சிங்கபெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. (நரசிம்மர் என்பதின் தமிழாக்கமே சிங்கப்பெருமாள்).
No comments:
Post a Comment