தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில். பூந்தமல்லி தரிசனநாள்.(18.6.2023).
அமைவிடம்.
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரு கி.மீ.தொலைவில் உள்ளது.
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவ ஸ்தலமாகும். ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது. “அங்காரகன்” என்று சொல்லக்கூடிய நவகிரக “செவ்வாய் ஸ்தலமாகும்.” மாசி மாதம் 21 முதல் 25 வரை (ஐந்து நாட்களுக்கு) கதிரவனின் கிரகணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. (இதற்கு பாஸ்கராய அபிஷேகம் என்று பெயர் இவ்வாறு தென் மாவட்டங்களில் மாசி மற்றும் பங்குனி மாதத்தில் அபிஷேகம் பல கோவில்களில் நடை பெறுகிறது).
தலவரலாறு.
இந்திரன் பெருவியாதியால் (குஷ்டரோகம்) துன்பபட்டான். உடல் உபாதை உள்ளவர்கள் ஆட்சியில் அமரக்கூடாது என்ற விதி உள்ளது. இதன் காரணமாக தேவேந்திரன் செவ்வாய் கிரகத்திடம், தன்னைவிட்டு சீக்கிரம் செல்லுமாறு வேண்டினான். அங்காரகனும் செவிசாய்தான். இதை அறிந்த மகாதேவர் தர்மநெறி தவறிய செவ்வாய் கிரகத்துக்கு பெருவியாதியை கொடுத்து தண்டித்தார். சிவனார் பாதங்களை வணங்கி இந்த இடத்தில் சிவலிங்கம் நிறுவி வழிப்பட்டு சாப விமோசனம் பெற்றார் அங்காரகன், என்பது வரலாறு.
No comments:
Post a Comment