இலங்கை ராமாயணகாவிய தலங்கள். (பயணநாள் 11.9.23 முதல் 16.9.23 வரை).
இலங்கையி
ல் 30 க்கும் மேற்பட்ட இடங்கள் ராமாயணத்துடன் தொடர்பு படுத்தி கூறப்படுகிறது. நாங்கள் பார்த்த நான்கு இடங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1.ரம்போடா ஆஞ்சநேயர் கோவில். (தரிசனநாள்.14.9.23)
இலங்கையில் ஆஞ்சநேயர் முதலில் வந்திறங்கிய இந்த இடத்தில், கோவில் கட்டி “சின்மையா மிஷின்”; பராமரித்து வருகின்றனர். நுவரேலியா என்ற மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளதால் இயற்கை எழிலுடன காணப்படுகிறது.
2. சீதா எலியா (தரிசனநாள்-14.9.23).
சீதை சிறை வைக்கப்பட்ட அகோசவனம் இந்த இடம் என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆஞ்சநேயரின் கால் தடம் இங்குள்ளது. கோவில் கட்டி வழிபட்டுவருகின்றனர்.
3.காயத்ரி பீடம் (தரிசனநாள் 14.9.23).
காயத்ரி பீடம் என்று கட்டிடம் கட்டி சிவனை வழிபட்டு வருகின்றனர். இந்த இடம் இந்ரஜித் (ராவணனின் மகன்) தவம் செய்த இடம் என்றும். மும்மூர்திகளும் இந்தஜித்திர்க்கு காட்சி கொடுத்து, ஆசிர்வதித்தனர் என்று இந்த பீடம் நடத்துபவர் கூறினார். அவர் பேசிய காணொளியை பதிவிடுகிறேன். இந்த மூன்று இடங்களும் அருகருகே அமைந்துள்ளது.
4. விபீஷணன் அரண்மனை. (தரிசனநாள் 16.9.23).
கொழும்பு விமானநிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது, இந்த இடம். விபீஷணன் கோட்டை என்று கூறுகின்றனர். ஆனால் பாரப்;பதற்கு அரண்மனை போன்று உள்ளது. ராமர் விபீஷணனுக்கும் அவர் மனைவிக்கும் பட்டாபிஷேகம் செய்துவித்த சிலை, மற்றும் பிள்ளையார், விஷ்ணு சிலையும் உள்ளது. ஆனால் தற்பொழுது புத்த மடாலயமாக மாற்றப்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment