முல்பாகல் விருபாக்ஷா

 முல்பாகல் விருபாக்ஷா (தரிசனம்-21.6.2025)

அமைவிடம்

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில். கோலார் நகரத்திலிருந்து, 30 கிலோமீட்டர், தொலைவிலும், முல்பாகல் என்ற இடத்திலிருந்து, 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

வரலாறு

 பல நூற்றாண்டுகளை கடந்தது இந்த ஆலயம்.  விருபாக்ஷா என்றால் தமிழில் முக்கண்ணன் என்று பொருள். 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால்  உருவாக்கப்பட்ட அமைப்பை பெற்றது. இக்கோவில் சிவலிங்கம், “அத்ரிமகரிஷி”யால் வணங்கப்பட்டது என்பதே மிக பழமையான வரலாறு. இதன் அருகிலேயே மிக சிறியதாக மற்றொரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காலைநேரத்தரில் தேன் நிறத்திலும், மாலை நேரத்தில் வெண்மையாகவும் மாறக்கூடியதாம். இரண்டாம் விஜயநகரபேரரசு காலத்தில், லக்கனதண்டீஷா என்ற ஆளுநர் இந்த லிங்கத்தை பார்த்த உடன் இக்கோவிலை  உருவாக்கினார். 

ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ள பெருமாள் சன்னதி, மற்றும் பிராகாரத்தில் கிருஷ்ணர், மற்றும் அம்பிகைக்கு சன்னதிகள் உள்ளன.

பொங்கல் பண்டிகையை ஒட்டி வரகூடிய ரதசப்தமியன்று, தேர்திருவிழர சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  

Photo are follows.

 


















No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...