நைனிதால், நைனா தேவி சக்தி பீடம் (தரிசனம்-25.5.2025)
சனிக்கிழமை இரவு பீம்தாலில் தங்கிவிட்டு, ஞாயிறு காலை நைனிதாலைஅடைந்தோம். மிகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமைவேறு, கேட்கவா வேண்டும் கூட்டத்திற்;கு. எரியிலும், கோவிலிலும் கூட கூட்டமில்லை. சாலை நெரிசல்தான் தாங்கமுடியவில்லை. 24 கி.மீ. தொலைவை 4 மணிநேரம் பிரயாணம் செய்துள்N;ளாம். மதியம் 2 மணிக்கு சரியாக நைநிதால் வந்தடைந்தோம். சற்று குளிராகவே இருந்தது.
ஏரி வரலாறு
முதலாம் நூற்றாண்டிலேயே இந்த ஏரியும், இந்த நைனாதேவி கோவில் பற்றிய குறிப்புள்ளது, குஷோனர் காலத்திலேயே. 1450களில் கூட சந்த் மன்னர்கள் இந்த நைநாதேவியை வழிபட்டதாக சான்றுள்ளது. ஆனால் ஆங்கிலேயர்கள் தாங்கள் தான் இந்த ஏரியை கண்டுபிடித்ததாக கூறுகின்றனர்
சக்திபீட நைனாதேவி.
51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த நைனாதேவி வழிபடப்படுகிறார். தேவியின் கண் விழுந்த இடமாக கருதப்படுகிறது. ஏரியின் டிரோன் பார்வையில் இந்த ஏரி கண்வடிவத்தில் கானலாம். நைனா தேவி சிலை 1842 ஆம் ஆண்டு மோதிராம்ஷா என்பவரால் நிறுவப்பட்டது. 1880 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் அழிந்து போனது. 1883 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. திரிசி சரோவர் என்ற பெயர் கொண்ட இந்த ஏரி மானசரோவருக்கு இணையாக புனிதமாக பக்தர்களால் கருதப்படுகிறது. சுவாமி விவேகானந்தரும் இங்கு வந்து தியானம் செய்து, இறைவனை வழிபட்டுள்ளார்.
நானும் நைனிதாலும்;
பள்ளிபருவத்தில் டார்ஜிலிங், நைனிதால் என்று படித்தது என்வாழ்நாளின் கனவு சுற்றுலா பகுதியாக இருந்தது. 2010 பிப்ரவரியில் டார்ஜிலுங்கும். தற்சமயம் நைனிதாலும் பார்துவிட்டேன். ஆனால் ஏனோ நைனிதால் மனதில் குதுகலத்தை ஏற்படுத்தவில்லை. திங்கட்கிழமை காலை டெல்லி வந்து அன்ற இரவு சுபமாக சென்னைவந்தடைந்தோம். ஹர ஹர மகாதேவா.
உதரகாண்ட் மாநிலம் என்பார்வையில்.
தென்இந்தியாவில் கேரளமாநிலம் தேவபூமி என்றும், வடஇந்தியாவில் உத்ரகாண்ட் தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. 2022 செப்டம்பர் 10 நாட்களும், 2024 செப்டம்பர் 15 நாட்களும், 2025 மேமாதம் 10 நாட்களும், மொத்தம் 35 நாட்கள் முழுநேரம் சுற்றுலாவாக இந்த மாநிலத்தை நாங்கள் சுற்றி வந்துள்ளோம். எல்லா இடங்களையும் பார்க முடியாது இருந்தாலும், எங்களால் முடிந்தவரை சிறப்பாக இந்த மாநிலத்தை பார்க்க விருப்பம். அதன் அடிப்படையில் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் பார்திருந்தாலும் நாங்கள் குறைந்தது 10நாட்கள் இங்கு தங்க முடி வெடுத்துள்ளோம். இறைவன்அருளட்டும். சார்தாம் யாத்திரையில் கங்கோத்ரி நிலசரிவு காரணமாக தடைபட்டுவிட்டது. பஞ்சபத்ரியில் பவிஷ்யபத்ரி தரிசனம் செய்யவில்லை. இந்த நான்கு தலங்களை மட்டுமல்லாது சற்று கூடுதலாக தரிசனம் செய்ய முயற்சிக்கிறோம் இறைவன் அருளட்டும்.
Photo and video are follows.
No comments:
Post a Comment