பீம்தால், பீமேஸ்வரர்.

 பீம்தால், பீமேஸ்வரர்.  (தரிசனம் 24.5.2025)

அல்மோராவில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, பீம்தால் கிளம்பி, வரும் வழியில் நீம்கரோலி பாபா ஆசிரமம் தரிசனம் செய்து விட்டு, மதியஉணவை முடித்துக்கொண்டு, சிறது நேரம் ஓய்வெடுத்து பின்னர் ஏரிக்கும் பீமேஷ்வரர் கோவிலுக்கும் சென்றோம்

அமைவிடம்

உத்ரகாண்ட் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற நைனிதால் அருகில் அமைந்துள்ளது.இந்த பீம்தால். இங்கேயும் ஏரிதான் உள்ளது. 5000 அடி உயரத்தில், 17ச.கி.மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது இந்த ஏரி.

வரலாறு

மகாபாரத காலத்தில் வாழ்ந்த பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமனால் உருவாக்கப்பட்ட ஏரி. பஞ்சபாண்டவர்களின் வனவாச காலத்தில் இங்கு இருந்த சமயம் திரௌரபதி சுத்தமான குடிநீர் கேட்டதாகவும், அற்காகவே மலையை குடைந்து நீர்வரத்து செய்து உருவாக்கிய ஏரி. இன்றளவும் மிகசுத்தமான குடிணீராகவே உள்ளது. இந்த நீரில் கொசு அண்டாதாம். இந்த ஏரியின் கரையில் பீமேஸ்வர் என்ற பெயரில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனராம் பஞ்சபாண்டவர்கள்.

தற்கால கோவில்

17 ஆம் நூற்றாண்டில் சந்த் வம்ச அரசர் “பாஸ்பகதூர்” என்பவரால் புனரமைக்கப்பட்டது. 

கேளிக்கைகள்.

இந்த ஏரியில் படகு சவாரி மற்றும், குழந்தைகளுக்கான நீர்விளையாட்டுகள் உள்ளன. ஏரியின் நடுவில் மீன்வளம் அமைத்து சுற்றுலா அங்கமாக இதை  பயன்படுத்துகின்றனர்.

சனிபிரதோஷவழிபாடு.

நாங்கள் தரிசனம் செய்தன்று பிரதோஷம் அதுவும் சனிக்கிழமை. சக பயணியரில் பெருமபாண்மையானவர்கள் இறைவனுக்கு அவர்கள் கையாலேயே ,அபிஷேகம் செய்து, பூஜை செய்து மகிழ்தனர். இந்த வாயப்;பு நம் தென்இந்தியாவில் கிடைக்காத ஒன்று.

Photos are follow.

















 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...