நந்தாதேவி

 நந்தாதேவி (தரிசனம்-23.5.2025)

இமயமலை சிகரங்கங்களில் இரண்டாவது உயராமான சிகரம் இந்த நந்தாதேவி சிகரம். இந்த நந்தாதேவி பார்வதியின் அம்சமாக மக்களால் வணங்கப்படுகிறார்.  பார்வதி மலைமகள் அல்லவா? இதன் காரணமாக இப்பகுதியில் நந்தாதேவி என்ற ஆலயம் மிக அதிகமாக உள்ளது. அதில் மிகவும் புகழ்பெற்றதும் சிறப்பானதுததான் இந்த அல்மோராவில் அமைந்துள்ள கோவில்.

வெள்ளிக்கிழமை காலை நாங்கள் அனைவரும் மிகவும் சாவகாசமாக எழுந்து குளித்து கிளம்பி சென்றோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு மிக அருகில் இருந்தது இந்த கோவில். 

சகபயணியர்அனைவரும் "லலிதா சகஸ்ரநாமம்", "லிதா பஞ்சரத்னம்", "லலிதாநவரத்தினமலை," "அபிராமி அந்தாதி" , "அம்மன் பாடல்கள்" என்று ஸ்லோகத்தால் மலையையே மூழ்கடித்தனர். 

பார்வதியின் ஒன்பது அவதாரங்களில் ஒருவர், இந்த நந்தாதேவி. சைலபுத்ரி, மலையின்மகள் என்று என்று அழைக்கப்படுகிறார்.

கோவில் சிறப்பு

1. 17 ஆம் நூற்றாண்டில் சந்த் மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்

2. 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற கொடிசத்யாகிரகத்தில், இந்த ஆலயத்தில் தான் ஆங்கில அரசுக்கு எதிராக நம் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

3. பாரதமாதாவுக்கு சன்னதி வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

4. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை “நந்தாதேவி ராஜ் ஜாட்” என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நாங்கள் மீண்டும்; தங்கியிருந்த அறைக்கு சென்று ஓய்வெடுத்து, மதியம் 2 மணிக்குமேல் காதர்மால் சூரியகோவிலும், காசர்தேவி என்ற அம்மன் கோவிலையும் தரிசனம் செய்தோம்.

Photo Follows.











No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...