ஜாக்கேஷ்வர்தாம்

 ஜாக்கேஷ்வர்தாம் (தரிசனம்-22.5.2025)

கங்கோலிகாட்டில் இருந்து நாங்கள் காலை ஒன்பதுமணிக்கு மேல் ஜாக்கேஷ்வர்தாம் என்ற கோவிலுக்கு கிளம்பி ஜாக்கேஷ்வர்தாம், தண்டீஸ்வரர், நீதிதேவன் கோலுதேவதா போன்ற இடங்களுக்கு பயணித்தோம்.

அமைவிடம்

உத்ரகாண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து, அல்டோரா என்ற இடம் சென்று அங்கிருந்து 3 கி.மீ. பயணித்து இந்த தலத்தை அடையவேண்டும். கடல் மட்டத்தில்லிருந்து 6140 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த சிவஷேத்ரம்.

நானும் ஜாக்கேஷ்வர்தாமும்.

லிங்கவடிவமாக ஜாக்கேஷ்வர் மற்றும் மிருத்யஞ்சரரும், புஷ்டிஅம்மனாக திகழும், இந்த சிவன் கோவில் பற்றி ஓராண்டுகளுக்கு முன்பு தமிழ் ஹிந்து செய்திதாளில் பாரதபிரதமர் நதேந்திர மோடியின் வருகை குறித்த செய்தியை படித்தேன். இந்த  கோவில் உள்ள இடமும் இதன் சிறப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஜோதிவடிவமான சிவபெருமான் முதன் முதலில் லிங்கவடிவமாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்த முதல் ஜோதிர்லிங்க கோவில் என்ற குறிப்பிடப்பட்டிருந்ததும்  எங்களின் வழிபாட்டு ஆர்வத்தை தூண்டியது. செல்வதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தநாள் வரை எந்த டிராவலரின் பட்டியலிலும் இந்த கோவில் இடம் பெற்று நான் பார்த்ததில்லை. நானும் என்கணவரும் இங்கு செல்ல தீமானித்த தலம் இது. இந்த டிராவலரின் அட்டவனையில் இந்த ஜாக்கேஷ்வர்தாம் குறிப்பிடடிருந்ததும், இவர்களுடன் செல்லும் உற்சாகத்தை மேலும் எங்களுக்கு கொடுத்தது. இந்த டிராவலரிடம் நான் இந்த கோவில் பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டதும் மிகவும் உற்சாகத்துடன் எங்களிடம் பேசினார்.

கோவில் அமைப்பு

2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில். 125 சிறிய கோவில்கள் என்பதைவிட  125 சிவன் சன்னதிகளை உள்அடக்கிய கோவில் என்பதே மிக சிறப்பான சொல்லாகும்.

கோவில் வரலாறு

பழங்காலத்தில் கைலாய யாத்திரை சென்றவர்கள் இடையில் உள்ள கோவில்களை எல்லாம் தரிசனம் செய்து கொண்டே செல்வர். அவ்வாறு பலராலும் தரிசனம் செய்யபட்ட தலம். ஆதிசங்கரர் அவரின் பாரதசுற்று நடைபயணத்தில்  இங்கேயும் தரிசனம் செய்தார் என்றும், அவரால் இக்கோவில் மேன்மையடைந்ததாகவும் தெரிகிறது.

ஆதிசங்கரரும் அவரது சுலோகங்களும். (கூடுதல்தகவல்கள்)

ஆதிசங்கரால் எண்ணற்ற சுலோகங்கள் எழுதப்பட்டுன. அதனின் சிறப்புகளும் அளவறியமுடியாதது. அவரின் ஜேரதிர்லிங்கசுலோகங்கள், சக்திபீடசுலோகங்களை வைத்தே சக்திபீட தலங்களும் ஜோதிர்லிங்க தலங்களும், மற்ற குறிப்புகளை வைத்தே, பல பழையான மற்றும்; சிறப்பவாய்த தலங்களும் நம்மை போன்ற சாமானியர்களால் அறியப்படுகிறது. ஜோதரிலிங்க சுலோகத்தில், “நாகேஷம் தாருகாவனே” என்பதை அடிப்படையாக கொண்டால், குஜராத் மாநிலத்தில் உள்ள நாகேஷ்வர் கோவிலும், மகாராஷ்டிராவில் உள்ள அவுந்நாகநாத், என்ற கோவிலும், இந்த ஜாக்கேஷ்வர் தாமில் உள்ள நாகநாத சுவாமியும் ஜோதிர்லிங்க கோவிலாகும்.” பரல்யாம் வைத்யநாதம்ச” என்ற இந்த இடம் மகாராஷ்ராவில் உள்ள பரலிவைத்யநாம் என்ற கோவிலையும், ஜார்கண்டில் உள்ள சிவன் கோவிலையும் குறிக்கிறது.

Photo and Video are fallows.




















































No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...