ஹாத்காளி

 ஹாத்காளி கோவில் (கங்கோலிகாட் தரிசனம் 21.5.2025)

பாதள புவனேஸ்வரரை சரிசனம் செய்து எங்ககளின் மதிய உணவை முடித்துகொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு ஹாத்காளி மந்திருக்கு கிளம்பினோம். 5570 அடி உயரத்தில் இருந்ததாலும்,  சற்று குளிரும் அதனுடன் கலந்த மழையில் இறைவனை தரிசனம் செய்ய கிளம்பினோம்.

தலபுராணம்

 எட்டாம் நூற்றாண்டில்  உருவான கோவில். ஆதிசங்கரர்,  கேதார்நாத் மற்றும் சில ஷேத்ரங்களை இமயமலை காடுகள் வழியாக சென்று தரிசனம் செய்த சமயம் இந்த கோவிலையும் கண்ணுற்றார். மிக உக்ரமாக இருந்த காளியை பார்த்து இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். அந்த சமயத்தில், யந்திரம் அமைத்த்து காளியை சாந்தப்படுத்தினார் என்பது வரலாறு.

ராணுவர்களின் பராமரிப்பு

1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைப்பள்ளத்தாக்கு கோவிலை, ராணுவத்தின் ஒருபகுதியான “குமோவான்” படைபிரிவினர், கோவிலை மேம்படுத்தி இஷ்டதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

படைவீரர்களின் “காளி மாதாகி ஜே“ கோஷம்

1918 ஆம் ஆண்டு குமோவான் படைவீரர்கள் சென்ற கப்பல் புயலில் சிக்கிக்கொண்டதாகவும், இதை இந்த ஹாத்காளிதான் காப்பாற்றினார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை படைவீரர்களிடம் உள்ளன. இதன் காரணமாக அவர்கள் இந்த கோஷத்துடனேயே அவர்களின் வேலையை தொடங்குகின்றனர்.

இரவுதங்கி செல்லும் காளி மாதா.

காளி தினமும் இங்குதான் இரவு உறங்குகிறார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இன்றளவும் கோவில் பூசாரி தினமும் காளிக்கு என்று படுக்கை வரித்து வைப்பதும். காளி மாதா காலையில் அதை சுருட்டி வைப்பதும் நிதம் நடை பெறும் அற்புதங்களில் ஒன்றாக உள்ளது.

கோவிலில் உள்ள ஹோம நெருப்பு காலம் காலமாக எரிந்துவருகிறதாம்.

காளியை தரிசனம் செய்துவிட்டு நாங்கள் கங்கோலிகாட்டிலேயே தங்கிவிட்டோம்.

Video and Photo are fallows.
























No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...