ஓம் பர்வதம்

 ஓம் பர்வதம் (தரிசனம்-18.5.2025)

ஓம் பர்வதம் விளக்கம். (6100 மீட்டர்(அ)19 ஆயிரம் அடி உயரம்) 



பிரணவ மந்திரமான ஓம் என்ற எழுத்து இயற்கையாகவே (சுயம்புவாக) மலைமேல் கையால் யாரோ பாறையில் செதுக்கியுள்ளது  போல் உள்ள இந்த இமயமலை பகுதியே ஓம்பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் உதித்தவுடன்  அந்த ஒளியில் பனி நன்கு உருக உருக இந்த ஓம் என்ற எழுத்து வடிவம் நமக்கு நன்றாக தெரிகிறது. லிபுலேக் கணவாய் வழியாக கைலாஷ் சென்ற நம்முடைய மூதாதையர்கள் பல பேர் இந்த இடத்தை கண்டு அதிசயித்துள்ளனர். ஆனால் தற்காலத்திலேயே புகைப்படம் மற்றும், இணையவழியாலும் பலரும் நன்கு அறிந்த பின்னர் இந்த இடம் பக்தர்களின் மத்தியில் மிகவும் புகழடைந்துள்ளது. இந்த இடம் லிபுலேக் கணவாய் அருகில் உள்ளது. ஓம்பர்வத்திலிருந்து லிபுலேக் கணவாய் 17000 அடி உயரத்திலும், 300 மீட்டர் நீளத்திலும் உள்ளது. இது அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. 

18.5. அன்று காலை 6 மணிக்க குஞ்சி என்ற மலைகிராத்தில் இருந்து கிளம்பினோம். ஓம் பர்வத தரிசனத்திற்காக. 

இடம் பற்றிய வரலாறு.

லிபுலேக் கணவாய் தான் நம் நாட்டின் எல்லை பகுதி. பின் 12 கி.மீ. தொலைவுக்கு பிறகு சீன எல்லை ஆரம்பிக்கிறது. இந்த இடைப்பட்ட 12 கி.மீ பகுதி மனிதரகளற்ற பகுதியாகவே உள்ளது. இதன் காரணமாக ராணுவத்தின் முழு கண்கானிப்பில் இந்த பகுதியுள்ளது.

கைலாயயாத்திரை பற்றிய சில தகவல்கள்.

தற்சமயம் நம் நாட்டில் சிக்கிம் மாநிலம், நாதுல்லா கணவாய் வழியாகவும், உத்ரகாண்ட் மாநிலம் லிபுலேக் கணவாய் வழியாக மட்டுமே, கைலாஷ் மானசரோவருக்கு நம் நாட்டு மக்கள் செல்கின்றனர். இந்த லிபுலேக் கணவாயிலிருந்து தூரத்தில் உள்ள கைலாய மலையை தரிசனம் செய்ய முடியும். இந்த லிபுலேக்கணவாய்வரை சாலை அமைபிற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது. இதையே மக்கள் கைலாஷ் வரை சாலை அமைப்பதாக தவறான செய்தியை பரப்புகின்றனர். கைலாஷ் என்பது திபெத் நாட்டில் உள்ளது. அண்டை நாட்டில் நாம் எவ்வாறு சாலை அமைக்கமுடியும?. இந்த அண்டை நாடும் நம்முடன் நல்ல உறவில் இல்லாத சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது.  கைலாய தரிசனத்திற்;கு குறைந்தது, இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகும். இந்த பகுதி முழுவதும் காளாபாணி என்ற நதி தான் ஓடுகிறது. இந்த நதி உற்பத்தியாகும் இடத்தையும் கடந்துதான் நாம் செல்ல வேண்டும்.

பர்வதம் கீழ் பகுதியில் ஒரு லிங்கம் வைத்து இதற்;கு அபிஷேகம் தீபாராதனை காண்பித்து பக்தர்கள் மகிழ்கின்றனர்.

ஓம் பர்வத் புகைப்படம் மற்றும் கானொளி.









2 comments:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...