இஸ்கான் பெங்களுர்

 இஸ்கான் பெங்களுர் (தரிசனம்-28.6.2025)

நாங்கள் மிக பழமையான மற்றும் கட்டிட கலை சிறப்புற்ற, மற்றும் வரலாறு சிறப்புமிக்க கோவிலை தரிசனம்செய்யவே விரும்புவோம். எங்களின் திட்டமிடலில் சற்று பின்னடைவு அடைந்ததே இந்த இஸ்கான் கோவில் தரிசனத்திற்கு காரணமாயிற்று.

அமைவிடம்

பெங்களுர் இஸ்கான் கோவில் மகாலெட்சுமி என்ற மெட்ரோ ரயில் நிலையம் (கிரீன் லைன்) அருகில் (நடந்து செல்லும் தூரத்தில்) உள்ளது.

இஸ்கான் அமைப்பு ஒரு அறிமுகம்.

1966 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் சுவாமி பிரபுபாதாவால் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்து (வைணவபிரிவு) கிருஷ்ண பக்தி பிரிவு சங்கம்.

 பெங்களுர் இஸ்கான்.

1997 ஆம் ஆண்டு (ஜனாதிபதி) சங்கர்தயாள் சர்மா அவர்களின் தலமையில் திறந்துவைக்கப்பட்டது. நாங்கள் 1997 செப்டம்பர் மாதம் என் கணவர் பெங்களுரில் பனிசெய்த காலத்தில் இந்த கோவிலை தரிசனம்செய்துள்ளோம்;. 

ராதாகிருஷ்ணர், பலராமர், சைத்தன்ய மகாபிரபு, வெங்கடேஸ்வரர், நரசிம்மர், ஆகியோர்களுக்கு சன்னதிகள் உள்ளன. நாங்கள் பெங்களுர், மும்பை மற்றும்; பிருந்தாவன் இஸ்கான் கோவில்களை தரிசனம் செய்துள்ளோம். 

Photo are follows









Siven Temple near Iskon .











கோலார் சோமேஸ்வரர்

 கோலார் சோமேஸ்வரர் (தரிசனம்-21.6.2025)

அமைவிடம்

கர்நாடகா மாநிலம் கோலார் என்ற நகரத்தில் அமைந்துள்ளது.

14ஆம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

மிக அற்புதமான கட்டிட கலை நயத்துடன் விளங்குகிறது இந்த கோவில். சோமேஸ்வர சுவாமி சற்று பெரிய லிங்க வடிவத்தில் அருள் பாலிக்கிறார். முகப்பு மண்டபம், கொலு மண்டபம், பார்வதி சன்னதி என்று கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு கோவில் போன்று பெரிய நிலபரப்பில் பல பிரகாரங்களுடன் அமையவில்லை என்றாலும், சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாக உள்ளன. புகைபடங்களை பார்த்து மகிழுங்கள். கட்டிட கலை ரசிகர்களை இந்த கோவில் மிகவும் ஈர்க்கும். சிவன் சன்னதியில் அருகில் அறுமுக கடவுள் காட்சி தருகிறார். 

இந்த கோலார் நகரை சுற்றி பல பழமைவாய்ந்த கோவில்கள் கலைநயத்துடன் உள்ளன. நாங்கள் முல்பாகல், அவானிபெட்டா, மற்றும் இந்த சோமேஸ்வரர் கோவிலை தொடந்து எங்கள் தரிசனம் தொடரும்.

Photo are follows.







































சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...