திருவல்லா (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024).
அமைவிடம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா என்ற ஊரில் திருவாழ்மார்பன், கோலப்பிரான், திருகொழுந்துநாச்சியாருடன் அருள்பாலிக்கிறார்.
தலபுராணம்.
சங்கரமங்கலத்தம்மையார் என்பவர் ஏகாதசி விரதம் மேற்கொண்டுவந்தார். இதை செய்யவிடாமல் ஒருஅசுரன் தடுத்தும் அச்சுறுத்தியும் வந்தான். பெருமாளே இந்த அசுரனை வதம் செய்து காத்தார் என்று புராணம் கூறுகிறது. பெருமாளை மார்பில் இருக்கும் லெஷ்மியுடன் தரிசிக்கும் பாக்கியம் இந்த அம்மையாருக்கு கிடைத்தது. இதன் காரணமாகவே திருவாழ்மார்பன் என்ற பெயருடன் பெருமாள் விளங்குகிறார்.
கருடன்.
சன்னதிக்கு எதிரே 50அடி உயரத்தில் ஒருதூணில் கருடன் உள்ளார். பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற கருடன் தயார் நிலையில் உள்ளதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
மார்பில் இருக்கும் திருமகளுடன் பெருமாளை தரிசிப்பதே இக்கோவில் சிறப்பாகும்.
நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற கோவிலாகும்
No comments:
Post a Comment