மீன்குளத்திபகவதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)
அமைவிடம்
கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பல்லசேனா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
பல நூற்றாண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த வைர வியாபாரிக்கு பஞ்சத்தால் வியாபாரம் செய்ய முடியாமல் போனது. அவர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டு, பின் பொற்றாமரை குளத்தில் உள்ள ஒரு கல்லை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டனர். அவர்கள் கேரளமாநிலம் பல்லசேனா என்ற கிராமம் மிக வளமுடன் இருந்ததால் அங்கு அவர்களின் வாழ்கையை தொடங்கினர். வணிகம் செய்ய போகும் இடத்திற்கு எல்லாம் இந்த கல்லை மீனாட்சியாக நினைத்து எடுத்து சென்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டு வந்தனர். வயது முதிர்ந்த காலத்தில் மதுரைக்கு செல்ல முடியாத காரணத்தால் பல்லசேனாவிலேயே அந்த கல்லை வைத்து(கோவிலாக) வழிபட தொடங்கினர். இறைவன் கோவில் அர்சகருக்கு கனவில் இட்ட கட்டளையால் ஊர் மையபகுதியில் ஒரு கோவில் அமைத்தனர் இந்தகோவிலே மீன்குளத்திபகவதியானது.
கோவில் சிறப்பு.
கேரளமாநிலத்தில் உள்ளதால் கோவில் அமைப்பு கேரளபாணியில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேக்குமரத்தில் செய்யப்பட்டுள்ள கொடிமரம், செப்பு தகடினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் ஹஸ்த நட்டத்திரத்தில் விழாசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றையதினமே கோவில் உருவாக்கப்பட்டநாளாகும்.
No comments:
Post a Comment