செங்கனூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
அமைவிடம்.
கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கனூர் அருகே உள்ள திருசிற்றாறு என்னும் ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் வரவாறு
மகாபாரத போர் முடிந்தவுடன் பாண்டவர்கள் பல ஷேத்ரங்களுக்கு சென்று வழிபட்டனர். மலைநாட்டில் அமைந்துள்ள இந்த பழமையான பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மனம் உருகிவழிபட்ட நிலையில் ஸ்ரீமன் நாராயணன் காட்சி தருகிறார் பாண்டவர்களுக்கு. தருமர் இக் கோவிலை புதுப்பிக்கிறார்.
கோவில் சிறப்பு
இமயவரப்பன் மேற்கு நோக்கி நான்கு கரங்களுடன் நின்றநிலையில் காட்சி தருகிறார். வலதுபுறத்தில் இருக்கும் இருகரங்களில் சக்கரமும் செந்தாமரையும் வைத்துள்ளார். இடது புற கரங்களில் சங்கும் தரையில் ஊன்றிய கதையுடன் காட்சி தருகிறார். தாயார் செங்கமலவல்லி.
நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி)
திகழ்வென் சிந்தையுள்ளிருந்தானை செழுநிலத்தேவர் நான்மறையோர்
திசை கைகூப்பி ஏத்தும் திருசெங்குன்றூரில் திருசிற்றாறங்கரையானை
புகர்கொள் வானவர்கள் புகலிடந்தன்னைஅசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறறியேன் பொருத்து முவுலகும் படைப்பொடு கெடுப்புக்காப்பவனே
No comments:
Post a Comment