சோட்டாணிக்கரை பகவதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)
கேரள மாநிலம் எர்ணாகுளம் என்ற இடத்தில் அமைந்துள்ள, மிகப்புகழ் பெற்ற கோவிலில் ஒன்றாகும்.
பெயர்காரணம்.
மூம்மூர்திளுக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும், ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை காட்சி கொடுத்ததால் “ஜோதின்னக்கரை” என்று பெயர் பெற்றது. இதுவே பின்னாளில் சோட்டாணிக்கரை என்று மருவியது.
கோவில் சிறப்பு.
பகவதி உடன்பிறப்புடன் சேர்ந்து, நாராயணனாகவும் உள்ளார். இதன் காரணமாகவே “அம்மே நாராயணா தேவிநாராயணா” என்று இக்கோவில் கூறுகிறோம். காலையில் “சரஸ்வதியாகவும்,” மாலையில் “மகாலெஷ்மியாகவும்”, இரவில் “துர்கையாகவும்,” நண்பகல் மற்றும் இரவு உச்சிகாலத்தில் “மகாகாளியாகவும”; காட்சி தருகிறார். மனம் சார்ந்த நோய்களுக்கு நிவாரணம் தரும் உலகநாயகியாக அருள்பாலிக்கிறார்.
விழாக்கள்
குருதி பூஜை என்ற குங்கும அபிஷேகம், மாசி மகம், நவராத்திரி, சித்திரை மாதப்பிறப்புபோன்றவை சிறப்பான விழாவாகும்.
No comments:
Post a Comment