குருவாயூரப்பன் (கேரள யாத்திரை 8.2.2024 – 15.2.2024).
பூலோகவைகுண்டம்.
ஸ்ரீமன் நாராயணனின் குறிப்பிட்ட பத்து அவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் மிகவும் புகழ்பெற்றது. குழந்தை கிருஷ்ணராக பல லீலைகள் செய்தவராக இந்த குருவாயூரப்பன் காட்சி தருகிறார். 108 திவ்யதேசங்களில் இடம் பெறாத இந்த கோவில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த குருவாயூரப்பன் சிலையின் காலத்தை கணக்கிடமுடியாததாக உள்ளது.
தலபுராணம்.
விஷ்னு பகவான் இந்த கிருஷ்ணர் சிலையை பிரம்மாவிடம் குடுத்ததாகவும், பிரம்மா இதை "சுதாபஸ்" என்ற மன்னனிடம் வழங்கினார். அவரும் அவரின் மனைவியும் இந்த விக்ரகத்தை வைத்து வணங்கி பக்தி செய்ததை கண்டு நான்கு பிறவிகள் உங்களுக்கு மகனாக பிறப்பதாக வரம் அளித்தார் ஸ்ரீமன்நாராயணன். பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவர், தேவகியாக புகழ்பெற்றனர். துவாரகையில் வைத்து வணங்கி வந்த இந்த கிருஷ்ணர், துவாரகை நகரம் நீரில் முழ்கும் சமயம், இந்த கிருஷ்ணரை குருபகவானும், வாயுபகவானும் குருவாயூரில் வைத்தனர். இதன் காரணமாகவே இந்த தலம் குருவாயூர் என்று பெயர் பெற்றது.
கோவில் சிறப்பு
குருவாயூரப்பன் மகிமைகள் என்று எண்ணிலடங்கா கதைகள் உள்ளன. குருவாயூர் கோவில் பற்றிய சிறப்புகள் தமிழ் இலக்கியங்களில் 14 ஆம் நூற்றாண்டுமுதல் உள்ளது. நாராயண பட்டத்ரி என்பவரின் “நாராயணீயம்”; இந்த கோவிலை மிகவும் பிரபலப்படுத்தியது. பிரதான சன்னதி 1638-ல் கட்டப்பட்பின் புகழ் பெற்ற புனித இடமாக மாறியது. 1716-ல் டச்சுகாரர்கள் கோவிலை கொள்ளையடித்து தீக்கிறையாக்கினர். பின் மீண்டும் புனரமைக்கப்பட்டது. கிழக்கு, மற்றும் மேற்கு என்று இரண்டுவாயில்களுடன் புனரமைக்கப்பட்டது.
நாங்கள் தரிசனம் செய்யத பிற ஆலயங்கள்.
மம்மியூர் (சிவன்கோவில்)
பார்த்தசாரதி கோவில்
No comments:
Post a Comment