திருப்புலியூர் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
அமைவிடம்.
கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் திருப்புலியூரில் அமைந்துள்ளது மாயபிரான் திருக்கோவில்.
பஞ்சபாண்டவர்களில் பீமனால் புனரமைக்கப்பட்டது இந்த தலம். இதன் காரணமாக இந்த ஷேத்ரம் பீமஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்ட்டது, இந்த திவ்யதேசம்.
நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி).
அன்றி மற்றோர் உபாயமென் இவளந்தண் துழாய் கமழ்தல்
குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழரங்கல் மல்கி
தேன் திசைத் திலதம் புழர குட்டநாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே
தலவரலாறு.
சிபிசக்ரவர்தியின் மகன் விருஷாதர்பி குட்டநாட்டை (திருப்புலியூரை) ஆண்டுவந்த சமயம், மன்னனுக்கு நோய் ஏற்பட்டு, வறுமையும் உண்டானது. அந்த நேரத்தில் சப்த ரிஷிகள் அங்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் தன்நிலை கூறி காப்பாற்றுங்கள் என்று வேண்டினான். ரிஷிகளுக்கும் தானம் கொடுக்க இயலும் என்று கூறியதை கேட்டு ரிஷிகள் கோபமுற்று அரசன் கொடுத்த பொருட்கனை புறக்கனித்தனர். இதன் காரணமாக மன்னன் யாகம் நடத்தி முனிவர்களை கொல்ல துணிந்தான் முனிவர்கள் இந்த மாயபிரானை சரணடைந்தனர்.
No comments:
Post a Comment