திருகாக்கரா (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் காக்கரா என்ற இடத்தில் இந்த திவ்யதேசம் அமைந்துள்ளது. ஓணம் பண்டிகைக்கு அடித்தளம் இட்ட இடம் இந்த இடம். அசுரகுலத்தை சேர்ந்தவன் என்றாலும் மகாபலி திறந்த பக்திமானாகவும் சிறப்பான ஆட்சியும் செய்து வந்தான்.
தலபுராணம்
வாமனஅவதாரத்தில் மூன்றடி மண் கேட்ட இடம் தான் இந்த திருகாக்கரா. வாழைமர தோட்ட வியாபாரிக்கு இந்த பெருமாள் அருளால்தான் நல்ல பழங்கள் கிடைத்ததாம் இதன் காரணமாக இறைவனுக்கு தங்கத்தால் வாழைத்தாரு செய்து கொடுத்ததாக ஒரு வரலாறும் உண்டு.
நேந்தர பழம்.
பெருமாளின் கண்கள் நேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. இவரருளால் கிடைத்த பழமாதலால் நேத்ரபழம் என்றானது. இதுவே மருவி நேந்தரபழம் என்று அழைக்கப்படுகிறது.
திருகாரயப்பன் வாமனராக அருள்பாலிக்கிறார். தாயார் பெருஞ்செல்வநாயகி.
No comments:
Post a Comment