திருவித்துவக்கோடு (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திருவித்துவக்கோடு என்ற திவ்யதேசம் அமைந்துள்ளது.
தலபுராணம்.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது பசுமையான இந்த இடத்தை தேர்வு செய்து வழிபட்டனர். அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த பெருமாளே உய்யவந்த பொருமாள் என்று மூலவராக காட்சி தருகிறார். தர்மன், நகுலன், சகாதேவன், பீமன் இவர்களும், தனிதனியாக பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். 5 பெருமாள்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மற்றொரு வரலாறு.
2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுனிவர் காசி விஸ்வநாதர் மீது மிகுந்த பக்தி கொண்டு காசியிலேயே தங்கி வழிபட்டுகொண்டிருக்கிறார். அவர் தாய்க்கு உடல் சுகவீனம் ஏற்படுகிறது. அதன் காரணமாக அவரின் ஊரான திருவித்துகவ்கோட்டிற்கு வருகிறார். பாரதப்புழா ஆற்றங்கரையில் உள்ள பெருமாள்கோவிலில் விஸ்வநாராக குடிகுண்டு அந்த வயதான முனிவருக்கு அருள் புரிகிறார்.
பாரதப்புழா
பத்து நதிகள் இணைந்ததே பாரதப்புழா. காசிவிஸ்வநாதரும் இருப்பதால் பித்ருக்கள் தர்ப்பணம் சிறப்பாக உள்ளது.
No comments:
Post a Comment