திருவண்வண்டூர் (கேரளதிவ்யதேசம் - 8.2.2024 – 15.2.2024).

 திருவண்வண்டூர் (கேரளதிவ்யதேசம் - 8.2.2024 – 15.2.2024).

அமைவிடம்

கேரளமாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், திருவண்வண்டூர் என்ற ஊரில் பாம்பணையப்பன், அருள்பாலிக்கிறார். 

தலபுராணம்












பிரும்மாவும், நாரதரும் பேசிக்கொண்டிருக்கும் சமயம், கரு த்துவேறுபாட்டினால் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டது, பிரும்மா மகன் என்றும் பாராமல், பிரும்ம உலகத்தை விட்டு வெளியேற்றினார். பூவுலகுக்கு வந்த நாரதருக்கு எந்த இடத்திலும் மன அமைதி  ஏற்படவில்லை. இந்த திருவண்வண்டூர், வந்த பிறகு அமைதி ஏற்படுகிறது. இந்த இடத்திலேயே அவரின் இஷ்ட தெய்வமான நாராயணனை வழிபட தொடங்குகிறார். அவரின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் நாராயணன் அவருக்கு காட்சி தருகிறார். நாரதர் உடனே உயிர் உருவாக்கதலின் தத்துவ ஞானத்தை கேட்டுப் பெறுகிறார். இந்த இடத்திலேயே இருந்து மக்களுக்கு அருள்பாலிக்குமாறு வேண்டுகிறார் நாரதர். உடனே நாரதர் நாராயணரை தான் வழிபட்ட முறை, அவரை புகழ்ந்து பாடிய பாடல்கள், பெருமாளின் கருணை போன்றவற்றை “நாரதீய புராணமாக” எழுதுகிறார். 

 காலத்திற்க்கு உட்பட்டு பராமரிப்பு இல்லாமல் இந்த கோவில் உள்ளது. அதை பஞ்சபாண்டவர்களில் ஒருவாரன “நகுலன்” புனரமைப்பு செய்து வழிபட்டதாக புராணம் கூறுகிறது.

மேற்கு நோக்கி நின்ற நிலையில் பாம்பணையப்பன் (எ) கமலநான் அருள்பாலிக்கிறார். கமலவல்லி நாச்சியார்.

கோசாலை கிருஷ்ணர்

இந்த பகுதியை தோண்டும் போது கிடைத்த கிருஷ்ணர் சிலையை இக்கோவில் வளாகத்திலேயே பிரதிஷ்டை செய்து கோசாலை கிருஷ்ணர் என்ற வழிபட்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...