திருபுராய்கல் பகவதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)
கேரளமாநிலத்தில் அம்மனை பகவதி என்று அழைக்கின்றனர். கச்சன குளம் திருபுராய்கல் பகவதி கோவில் பாலக்காட்டில் அமைந்துள்ளது. கண்ணகி கோவில் என்று கூறப்படுகிறது. இங்கு சிவபார்வதி கோவிலும் உள்ளது. கண்ணகி கோவில் கேரள முறைப்படியும், சிவனுக்கு தமிழ் முறைப்படியும் பூஜைகள் செய்யப்படுகிறது. திப்புசுல்தான் காலத்தில் இந்த கோவில் சூறையாடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment