திருக்கடிதானம் (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
“கடி” என்ற சொல் கொண்டு மூன்று திவ்யதேசங்கள் உள்ளன.
1. திருக்கடிகை – சோளிங்கர். (நரசிம்மர்)
2. திருக்கடிதானம் - கேரளதிவ்யதேசத்தில் ஒன்று)
3.தேவப்பிரயாகை – (அலகானந்தா-பாகீரதி நதி கூடும் இடம்
திருகண்டமென்னும் கடிநகர்)
ஒரு கடிகை நேரம் (நாழிகை-24நிமிடம்) இத்தலத்தில் தவம் மேற்கொண்டால் செயல்களில் வெற்றியும், வீடுபேறும் கிடைக்கும்.
நம்மாழ்வார் பாசுரம்.
கோவில் கொண்டான் திருக்கடிதானத்தை
கோவில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோவில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
கோவில் கொண்ட குடக் கூத்த அம்மானே
தலவரலாறு மற்றும் பெயர் காரணம்.
சூரியவம்ச அரசன் ருக்மாந்தகன் திருக்கொடிதான பகுதியை ஆண்டுவந்தான், இந்தபகுதி நந்தவன பூக்கள் காணமால் போனது, அரசர் மலர்கள் பறிப்பவர்களை, கைது செய்ய உத்தரவிட்டார். கைதானவர்கள் தேவர்கள் என்பதை அறிந்து அரசன் அவர்கனை விடுவித்தான் ஆனால் அவர்களால் வானுலகம் செல்ல முடியாமல் போனது. ருக்மாந்தகனின் ஏகாதசி விரத பலனை பெருமாள் முன் இவர்களுக்கு தானமாக கொடுத்தான் பின் தேவர்கள் வானுலகம் சென்றனர். இவை அனைத்தும் ஒரு கடிகை நேரத்திற்குள் நடந்ததால், திருக்கடிதானம் என்ற பெயர் பெற்றது இந்த தலம்.
அற்புத நாராயணன்.
பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் பெருமாளைவடிக்க கல் கிடைக்காமல் போன காரணத்தால், சகாதேவன் வருத்தமுற்று உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான், இறைவன் தடுத்து இயற்கையாகவே இங்கு பெருமாள் தோன்றினார், இதன் காரணமாக பெருமாள் அற்புநாராயணன் என்று அழைக்கப்படுகிறார். நாச்சியார், கற்பகவல்லி.
கோவில் நடை சாற்றிய பிறகு அரசனிடம் இருந்து கையூட்டு வாங்கி கொண்டு தரிசனம் செய்ய வைத்ததால் மெய்காபாளரருக்கு கொடுக்கப்பட்டதண்டனை என்று கூறப்படுகிறது. (see this photograph)
No comments:
Post a Comment