காலடி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024).
அமைவிடம்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊரின் பெயர் காலடி. ஆதிசங்கரரின் அவதார தலமாக இந்த ஊர் இருப்பதால் புகழ் பெற்று விளங்குகிறது.
ஆதிசங்கரர் மகான்.
1. அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் “பிரும்மம் ஒன்றே” என்ற “அத்வைத தத்துவத்தை” போதித்தவர் மகான் ஆதிசங்கரர்.
2. அவர் தோற்றிவைத்த மடங்கள். காஷ்மீர், கேதார்நாத், பத்ரிநாத், துவாரகா, ஸ்ரீருங்கேரி, பூரி. இவர் வாழ்ந்த காலம் 788 முதல் 820 A.D வரை.
3.திருச்சூர் வடக்குநாதர் அருளால் அவதரித்தவர்.
4. இங்கு ஓடும் பூர்ணா நதியை அவரின் அம்மாவிற்காக வீட்டுஅருகிலேயே ஓடச்செய்த மகான்.
5. இந்த நதியில் குளிக்கும் சமயம் அதிசங்கரரின் காலை ஒரு முதலை கவ்வியதாகவும், இந்த முதலை தன்னை விடுவிக்க வேண்டுமானால், அவரின் சன்யாசத்தை அம்மா ஏற்க வேண்டும், என்று கூறியதாக ஒரு வரலாறு உண்டு. மகன் சன்யாசம் மேற்கொண்டாலும் உயிருடன் இருப்பதே நல்லது என்று அவரின் தாய் சன்யாசத்திற்கு சம்மதம் தெரிவிததார் என்று கூறுவர்.
சிறப்பு
சங்கரரின் தாயார் சமாதி இங்குள்ளது. ஆதிசங்கரர் வழிபட்ட மரகதலிங்கத்தை தரிசனம் செய்து மகிழ்ந்தோம். கிருஷ்ணர் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
No comments:
Post a Comment