திருவனந்தபுரம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி அனைவராலும் நன்கு அறிபட்ட தலம். இது மலைநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது.
கோவில் சிறப்பு
தமிழ்நாட்டு கோவில் போன்று நீண்ட நெடிய கோபுரம் கொண்ட ஒரே மலைநாட்டு திவ்யதேச கோவில் (100 அடி உயரம் 7நிலை ராஜகோபுரம்) 12 ஆயிரம் சாளகிராம கற்களால், 18 அடி நீளம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாள்.
நம்மாழ்வார் பாசுரம் (திருவாய்மொழி)
கெடும் இடராய எல்லாம் கேசவா என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே
ஆதி தலவரலாறு.
வில்வமங்கலத்து முதியவர் ஸ்ரீமன்நாராயணனை எப்போதும் பூஜித்து வந்தார். இவரது பொறுமையை சோதிப்பதற்காக இறைவன் சிறு குழந்தையாக வந்து இவரை தொந்தரவு செய்கொண்டே இருந்தார். ஒருநாள் முதியவர் பொறுமை இழந்து அந்த குழந்தையை கடிந்துகொண்டு, தள்ளிவிடுகிறார். உடனே இறைவன் இவர்முன் தோன்றி பகதிக்கும் பொறுமை மிக அவசியம் என்று சொல்லி, என்னை மீண்டும் பார்க்க வேண்டுமானால் "அனந்த காட்டிற்கு வா" என்று சொல்லி மறைந்து விடுகிறார். இந்த முதியவருக்கு இந்த காடு எங்குள்ளது என்றே தெரியவில்லை பலரை கேட்டும் பயனில்லை. ஒருநாள் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுகொள்வதை கேட்க நேரிடுகிறது. கோபத்தில் அந்த கணவன் மனைவியை நான் உன்னை அனந்த காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவேன் என்று சொன்னதை கேட்டு அந்த முதயவர் அந்த கணவனின் உதவியுடன் அந்த காட்டிற்கு சென்று விடுகிறார். காட்டுப்பாதை மிக கடினமாகவும் மிகுந்த ஆபத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இந்த காட்டில் ஸ்ரீமன் நாராயணன் நீண்ட நெடிய கிடந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சிதருகிறார். அதிர்ந்து, பயந்து, பின் மகிழ்ந்து வணங்கினார். இதை மன்னனிடம் தெரிவிக்கிறார். படைசூழ மன்னன் அனந்த காட்டுக்குள் நுழைந்தான். ஆனால் இறைவன் இல்லை. முதியவர் இறைவனை வர்ணனை செய்ததன் அடிப்படையில் இந்த அனந்தபத்தநாபஸ்வாமி கோவிலை உருவாக்கினான் மன்னன்.
17ஆம் நூற்றாண்டு வரலாறு.
1688 ஆம் ஆண்டு கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இலுப்பை மரத்தலான விக்ரகம் சேதம் அடைந்தது. 1729 ஆம் ஆண்டு “ராஜா மார்தாண்டவர்மன்” 12008 சாளகிராமத்தாலும், ஒரு வகையான அஷ்டபந்தன கலவையதலும் 18 அடி நீள அனந்தசயன முர்த்தியை உருவாக்கினான். 1750-ல் அந்த அரசன் அனைத்து சொத்து மட்டும் ராஜ்யத்தையும் பத்மநாபஸ்வாமிக்கு பட்டயம் எழுதி வைத்துவிட்டு, உடைவாளை பாதத்தில் வைத்து சரணாகதியடைந்தார்.
No comments:
Post a Comment