திருநாவாய். (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருநாவாய். (கேரள திவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

108 திவ்யதேசங்களில், கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்யதேசமாகும். திருமங்கையாழ்வார், பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்த கோவில். நாவாய்முகுந்தன் பெருமாள், மலர்மங்கைநாச்சியார் தாயார்.

நம்மாழ்வார் பாசுரம்;

மணாளன் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்

கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம்

விண்ணாளன் விரும்யுரையும் திநாவாய்

கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.

 தலவரலாறு.

திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து தாமரை மலர்கள் எடுத்து பெருமாளை பூஜித்து வந்தனர். கஜேந்திரனுக்கு மலர்கள் கிடைக்காததால் மிகவும் வருந்தினான். கஜேந்திரனுக்கு மலர்களை  விட்டு கொடுக்குமாறு திருமால் பணித்தார். இதன் காரணமாக கஜேந்திரனக்கு மலர்கள் அதிகம் கிடைத்து மனம் மகிழ்ந்து திருமாலை பூஜித்தார். பூஜிக்கும் சமயம் திருமால் மற்றும் தாயார் சேர்ந்து கஜேந்திரனுக்கு காட்சியளித்தனர். கேளத்தில் உள்ள  திவ்யதேசங்களில் இங்கு மட்டுமே தாயாருக்கு தனிசன்னதியுயள்ளது.

மும்மூர்த்தி தலம்








ஆற்றங்கரையில் பிரும்மாவுக்கும், சிவனுக்கும் தனி சன்னதியுள்ளது இதன் காரணமாக திருநாவாய் மும்மூர்தி தலம் என்று அழைக்கப்படுகிறது.

தல சிறப்பு


துவாபரயுகத்தில் கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து இந்த தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையன்று ஆயிரக்காணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தரப்பணம் செய்கின்றனர். திருமங்கையாழ்வார், திருகோஷ்டியூர் மற்றும் திருநரையூரோடு ஒப்பிட்டு பாடல் எழுதியுள்ளார். 

 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...