திருவாறன்விளை (எ)ஆரமுளா (கேரளதிவ்யதேசம்8.2.2024 – 15.2.2024).
அமைவிடம்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரன்முளா என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த பார்த்தசாரதி பெருமாள்(எ),திருக்குறளப்பன் திவ்யதேசம்.
நம்மாழ்வார் பாசுரம்.
ஆங்குகொல் ஐயமென்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு பெயர்காரணம்நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்மாகம்
திகழ் கொடிமாடங்கள் நீடு மதிற் திருவாறன்விளை மாகந்த
நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ
தலபுராணம்.
மகாபாரத போரில் தர்மத்தை மீறி கர்ணனை கொன்றமையால் அர்ஜுனன் இத்தல பெருமாளை புதுபித்து வழிபட்டான் என்கிறது வரலாறு.
.
6 முங்கில் துண்டுகளால் ஆன மிதவையில் பெருமாள் விக்ரகத்தை அர்ஜுனன் கொண்டு வந்தமையால் திரு ஆறன்விளை என்று அழைக்கப்படுகிறது.
கோவில் சிறப்பு.
திருக்குறளப்பன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோவில் மதிலை ஒட்டி பம்பா நதி ஓடுகிறது. பரசுராமருக்கு தனி சன்னதியுள்ளது. வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டுகொடுத்தமைக்காக, பிரும்மா இந்த தலத்தில் வாமன அவதாரத்தை காண தவம் மேற்கொண்டார். ஐயப்பசுவாமியின் அணிகலன்கள் இந்த கோவிலில் தான் பாதுகாக்கப்படுகிறது.
No comments:
Post a Comment