திருவட்டாறு (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

 திருவட்டாறு (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம்.










மலைநாட்டு திவ்யதேசம் என்றாலும், தமிழ்நாட்டில்,   கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு என்ற இடத்தில் உள்ளது ஆதிகேசவபொருமாள் கோவில். 

நம்மாழ்வார் பாசுரம்

வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பு அறுப்பான்

கேட்டாயே மடநெஞ்சே கேசவன் எம்பெருமானை

பாட்டாய பலபாடி பழவினைகள் பற்று அறுத்து 

நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே

தலவரலாறு.

நான்முகன் செய்த யாகத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல், முனிவர்களும், தேவர்களும் திருமாலை வேண்டினர். கேசனை அழித்தார். கேசிமேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி திருமாலை அழிக்க கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைத்து, வந்தாள். பூதேவி பெருமாள் சயனித்த பகுதியை, மேடாக்கினார்.  இதன் காரணமாக தாமிரபரணியும், கங்கையும் இரண்டாக பிரிந்து மாலையாக வட்டவடிவில் ஓடின இதன் காரணமாக வட்டாறு என்ற பெயரை இந்த ஊர் பெற்றது. கேசி தப்பிக்க முயற்சித்த சமயம், இறைவன் 12 ருத்திராஷங்களை பயன்படுத்தி அவனை அழிதாராம். இதன் காரணமாக இந்த கேசவபெருமாள் கோவிலை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன. இன்றளவும் இந்த 12 சிவாலயங்களையும் சிவராத்திரியன்று ஒடி(Running fomat) சென்று தரிசித்து இந்த திவட்டாறு பெருமாள் கோவில் தரிசனத்துடன் முடிக்கின்றனர்;. 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...