கொடுங்கலூர்பகவதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

 கொடுங்கலூர்பகவதி (கேரளயாத்திரை 8.2.2024 – 15.2.2024)

அமைவிடம் 

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்களுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 

வரலாறு






பரசுராமரையும், ஊர் மக்களையும், தாரகன் என்ற அசுரன் துன்;படுத்திவந்தான் இதன் காரணமாக ஈஸ்வரன் இந்ததலத்தை அமைத்து, பார்வதியே பத்ரகாளியாக இங்குவீற்றிருக்க செய்தார் என்பதே வரலாறு. மதுரையை எரித்தப்பின் கண்ணகியே இந்த சேரநாட்டில் குடிகொண்டதாகவும் ஒரு கருத்து உண்டு. 

ஆதிசங்கரரால் 6 சக்கரம் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. ஆடு, கோழி போன்றவை பலியிடப்பட்டு வந்த இந்த கோவிலில் தற்பொழுது அரசு ஆணைப்படி உயிர்பலி தடுக்கப்பட்டுள்ளது. சேரநாட்டு கொடுங்களுர் அரச வம்சத்தினரின் குலதெய்வமாக இந்த அம்மன் திகழ்கிறார். 

கோவில் அமைப்பு. 

சிவன் மற்றும் கணபதி, சப்தகன்னியர்களுக்கு நடுவே அம்மன் பத்ரகாளியாக காட்சி தருகிறார். வடக்குபார்த்த கோவில், பத்து ஏக்கர் நிலப்பரப்பில், அரசமரநிழலில் காட்சி தருகிறது இந்த கோவில். ஏழடி உயரத்தில் எட்டுகரங்களுடன் பலாமரத்தாலான சிற்பமாக பகவதி காட்சி தருகிறார். “பரணிவிழா” என்ற விழா மாதக்கனக்கில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...