திருமூழிக்களம் (கேரளதிவ்யதேசம் 8.2.2024 – 25.2.2024)
அமைவிடம்.
கேரளமாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் என்ற இடத்தில் உள்ளது இந்த லெஷ்மணபெருமாள் ஆலயம்.
லெஷ்மணன், பரதன் வழிபட்ட தலம். நம்மாழ்வார் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்.
நம்மாழ்வார் பாசுரம்.
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்துநீர் இளம்குருகே திருழூழிக்களத்தார்க்கு
ஏந்துபூண் முலை பயந்து என் இணை மலர்க்கண் நீர் ததும்ப
தூம்தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே.
தல புராணம்.
கிருஷ்ணர், துவாரகையில், ராமர், லெஷ்மணர், பரதர், சத்துருக்கனர் ஆகியோர் விக்ரகம் வைத்து வழிபட்டுவந்தார். துவாரகை நீரில் ழூழ்கிய சமயம் ஒருமுனிவரிடம் இந்த விக்ரகங்கள் கிடைத்தன. திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோரம் இந்த விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய பணித்தார். இதன் அடிப்படையில் திருப்பரையாற்றில் ராமர் கோவிலும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோவிலும், பாயமல் என்ற இடத்தில் சத்ருக்கனன் கோவிலும், திருழூழிக்களத்தில் லெஷ்மணபொருமாள் கோவிலும் முனிவர் அமைத்தார்.
ஹரிதமகரிஷி.
உலக மக்கள் அனைவரும் திருமால் திருவடியடைய இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். உடனே திருமால் ஸ்ரீசுக்தியை அவருக்கு அருளினார்.
சிறப்பு.
நான்கு திருக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார் திருழூழிக்களத்தான். மேல் இரண்டுகையில் சங்கு சக்கரமும், கீழ் கரத்தில் கதை மற்றும் தாமரையுடன் காட்சி தருகிறார்.
சிவபெருமானுக்கு தனி சன்னதி என்றில்லாமல் சிவன், பெருமாள் சன்னதிகளும் இரட்டை கோவில் போன்று காட்சி தருகிறது.