விகாகோட். (VIGHAKOT) (21.2.2024) (குஜராத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதி)
நாங்கள் சென்ற வழி.

இந்தியா பிரிட்ஜ், (India Bridge) விகாகோட், (Vighakot)(இந்தியா-பாகிஸ்தான் எல்லை) அனுமான் மந்திர், வார் மெம்மோரியல், (War Memorial) இந்த இடங்களுக்கு சென்று விட்டு இரவுதான் பூஜ் திரும்பினோம்.
மாண்வி கடற்கரை. (Mandvi Beach)
பூஜ்ஜிற்கு அருகில் அமைந்துள்ள தங்கநிற கடற்கரை என்று பெயர் பெற்ற மிகவும் புகழ்வாய்ந்த கடற்கரையாகும். பூஜ் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து முன் பதிவு செய்து இந்த கடற்கரைக்கு சென்று வந்தோம். ஆனால் எதிர்பார்தளவிற்கு சிறப்பாகயில்லை. குறிப்பாக நன்கு பராமரிக்கபடவில்லை.
நாங்கள் எடுத்த புகைப்படங்கள்.
விகாகோட் செல்ல என்ன செய்ய வேண்டும்?
B.S,F. (Border Security Force - அனுமதி வெற வேண்டும்.) நாம் எத்தனை பேர் பயணிக்கவிரும்புகிறோமோ அவர்களின் ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு அனுமதி பெற வேண்டும். நாம் செல்லும் காரின் பதிவு எண் (வாடகை கார் (அ) சொந்த கார்) மற்றும் ஓட்டுநரின், பெயர். ஆதார் அட்டை நகல் கொண்டு முன்பே அனுமதி பெற வேண்டும். அனுமதி கடிதம் கைபேசியில் இருந்தாலும், இந்தியா பிரிஜ்க்கு (India Bridge) பிறகு கைபேசி மற்றும் புகைபடக்கருவி அனுமதி மறுக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் மூன்று இடத்தில் நாம் நமது அனுமதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.
எங்களது அனுமதி கடிதத்தை பகிர்ந்துள்ளேன்.
எங்களின் பயண அனுபவம்.
கடினமான பயணம். கடைசி ஒரு 50 கி.மீ. மிகவும் கடினமாக இருந்தது. மிக குறுகலான, கல், மேடு, பள்ளம் நிறைந்த சாலை. இருபக்கமும் பாலைவனம். மிக கூர்ந்து கவனித்தால் மட்டுமே ஆங்காங்கே நிற்கும் ஒட்டகங்கள். மயான அமைதி. நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா? எவ்வளவு தூரம் உள்ளது (அ) எவ்வளவு தூரம் கடந்துள்ளோம் என்பதை அறிய முடியாத சூழல். சூரியன் மட்டுமே கொடுக்கும் தைரியம். பெரும்பாலான ஓட்டுநர்கள் இந்த பயணத்தை தவிர்த்து விடுகின்றனர். யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. இறையுணர்வை நம்பி செல்ல வேண்டிய பயணம்.
பூஜ்ஜில் இருந்தே பாலைவனப்பகுதி தொடங்கி விடுகிறது. இந்தியா பிரிட்ஜ்வரை நாங்கள் எடுத்த புகைபடத்தை பகிர்துந்துள்ளேன்.
கட்ச் (Kutch)
இங்கு நாங்கள் தரிசனம் செய்த தத்தாத்ரேயர் கோவில், மற்றும் கட்ச் மலைபகுதியில் இருந்து ஒரு பார்வை, இவையே கட்சில் நாங்கள் சென்ற சுற்றுலா.
காந்தப்பாதை (Magnetic Zone)
க
கச்சில் இருந்து பூஜ் வரும்வழியில் உள்ள ஒரு அதிசயமான இடம். கார் பள்ளத்தை நோக்கி நிறுத்தினாலும், மேடு நோக்கி கார் தானகவே மேல் நோக்கி செல்கிறது ( When car kept in Neutral mode). இதை எங்கள் ஓட்டுனர் மூலம் நாங்கள் சோதித்து பார்த்து அதிசயித்தோம். நாங்கள் எடுத்த காணொளியை பகிர்கிறேன்.
கிருஷ்னா பாரஸ்ட் ரிசார்ட்.
நாங்கள் பூஜ்ஜில் இரண்டு இரவு தங்கிய இடம். பெயரில் மட்டும் காடு இல்லாமல் உண்மையாகவே காட்டுபகுதியில் இருந்தது. புகைப்படம் மற்றும் காணொளி பகிர்ந்துள்ளேன்.
No comments:
Post a Comment