நர்மதாபரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-1.
நர்மதா பரிக்ரமா என்றால் என்ன?
நர்மதா என்ற நதி மத்யப்பிரதேச மாநிலம் அமர்கண்டக் என்ற இடத்தில் உற்பத்தியாகி, மத்யப்பிரதேசம், மகாராஷ்ரா, குஜராத் மாநிலம் வழியாக பாயந்தோடி, குஜராத் மாநிலம் கம்பத் வளைகுடாவில், அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நதியை வலம் (சுற்றி) வருவதே நர்மதாபரிக்ரமா என்று அழைக்கப்படுகிறது.
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
தென்இந்தியாவில் கிரி (மலை) வலம் வருவது போன்று, வட இந்தியாவில் நர்மதை ஆற்றை வலம் வருவது சிறப்பானதாக உள்ளது. ஆடம்பரங்களை பின்பற்றாமல் உணவை யாசகமாக பெற்று, காலணி அணியாமல் வலம் வர வேண்டும்.
வரலாறு.
புராணத்தின் படி நர்மதை சிவன் உடலில் இருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது. இதனால் நர்மதை ஜடாசங்கரி என்று அழைக்கப்படுகிறார். நர்மதாபரிக்ரமாவை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் மாகண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஷ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மகாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் பரிக்கிரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். தொன்று தொட்டு பலராலும் இந்த பரிக்ரமா செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் மாநில மக்கள் இந்த நதி வலம் வருவதை வாழ்வின் ஆன்மீக கடமையாக கருதுகிறார்கள். 3வருடம், 3மாதம், 13 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும் என்பது மரபு. இன்றளவும் பலரும் குறிப்பாக 60 வயது மேற்பட்டவர்களும், குழந்தைகளும் இந்த வலம் வரும் நிகழ்வை பாதயாத்திரையாக செய்கின்றனர். நாங்கள் காலத்தின் கட்டாயத்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு 12 நாட்கள் பேருந்தில் வலம் வந்தோம். நர்மதை நதிக்கரையில் ஓம்காரேஸ்வர், மமலேஸ்வர், மஹேஸ்வர், கருடேஷ்வர், விமலேஸ்வர், சித்தேஷ்வர் என்று சிவாலயங்கள் பல உள்ளன. பர்வானியில் சமணர்களுக்கான கோவிலும் அமைந்துள்ளது உள்ளது. இதில் மமலேஷ்வர் மற்றும் ஓம்கோரேஷ்வர் கோவில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக உள்ளது.
12.3.2024 (நாள் ஒன்று). நர்மதாபுரம்
No comments:
Post a Comment