நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-6
18.3.2024 (நாள் ஏழு), நீமாவர்.
இந்த நீமாவர் நர்மதை நதியின் நாபி ஸ்தானமாக கருதப்படுகிறது. சனந்தர், சனாதநர், சனந்தகுமாரர் ஆகியோருக்கு தட்சிணாமூர்தியாக இருந்து பிரம்மோபதேசம், செய்துவித்த இடம். சுப்ரமணியர் தாரகமந்திரம் உபதேசம் பெற்ற இடம். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் சேர்ந்து நிர்மானித்த கோவில் இது. பீமனால் கிழக்கு நோக்கி நகர்தப்பட்ட கோவில். சித்தேஸ்வர் நமக்கு ஞானத்தை வழங்குகிறார். நான்கு யுகத்துக்கு மேல் உள்ள பழமையான கோவில். நாபி என்பது உடல்பாகத்தில் தொப்புள் என்று கூறுகிறோம். அன்னையின் உறவை நாம் தொப்புள் கொடி உறவு என்று கூறுவோம். அது போல் இந்த உலமாதாவிடம்(பராசக்தியிடம் நமக்கு நல்ல உறவு ஏற்படும் பாக்கியம் கிடைக்கிறது இந்த சித்தேஸ்வமகாதேவரை வழிபட்டால். அன்னையின் அருள் என்றும் பரிபூரணம்.
படகில் சென்று ஆற்றின் மையப்பகுதியில் இருக்கும் சிவலிங்கத்தை தொட்டு உணர்ந்து வழிபடுவர். நாங்கள் நர்மதாபரிக்ரமா விதிமுறைகளுக்கு உட்பட்டு சென்றதால் இவ்வாறு வழிபாடு செய்யவில்லை.
19.3.2024 (நாள் எட்டு). ஜபல்பூர்.
மத்யபிரதேச மாநிலத்தில் போபால். மற்றும் இந்தூர்க்கு அடுத்தப்படியாக ஜபல்பூர் பெரிய நகரமாகும். இங்குள்ள நர்மதை ஆற்று படித்துறையில் நீராடி வழிபாடு செய்தோம்.
ஜாபாலி மகரிஷி.
ஆறு தத்துவ பிரிவுகளில் ஒன்றான “நியாயா” என்ற பிரிவை நிலைநாட்டியவர். கௌதம முனிவரின் சீடர். இவர் பெயரில் உருவாக்கப்பட்டதே இந்த ஜபல்பூர் நகரம்.
No comments:
Post a Comment