உஜ்ஜயின்.

 உஜ்ஜயின். (11.3.2024)

மகாகாளேஸ்வர் தரிசனம் எப்படி கிடைத்தது?


நாங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா நதியை வலம் வரும் ஒரு புனித பயணம் மேற்கொள்ள ஜெயலெஷ்மி யாத்ரா மூலம் முன் பதிவு செய்திருந்தோம். சென்னையில் இருந்து வரும் யாத்திரிகர்களுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரத்தில்(ஓஷங்காபாத்) சந்திக்க திட்டமிட்டோம். இதன் அடிப்படையில் உதய்பூரில் இருந்து நர்மதாபுரம் செல்ல நேரடி புகைவண்டி வசதியின்மை காரணமாக உஜ்ஜயின் வழியாக சென்றோம். ஒருநாள் யாத்திரையாக முடிவுசெய்து, மாகாகாளேஸ்வர் தரிசனம் பெற்றோம்.









உஜ்ஜயின் சிறப்பு.

இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இங்கு நடைபெறுகிறது. சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களின் ஒன்றாக உஜ்ஜனின் மகாகாளேஸ்வர் உள்ளார். மகாகவி காளிதாசருக்கு அருள் புரிந்த காளியின் கோவில் இங்குதான் உள்ளது. இங்கு உள்ள அம்மன் சங்கரி மகாளம் சக்திபீடங்களில் ஒன்று. அசோகர், மௌரிய பேரரசர் காலத்திலும் இந்த உஜ்ஜயின் மிக புகழுற்று விளங்கியது.


மகாகாளேஷ்வர்.

இங்கு காலத்தினால் ஏற்பட்ட பல இடர்பாடுகளை தாங்கி நிற்கிறார் சிவபெருமான். அதிகாலையில் நடக்கும்  பஸ்ம ஆரத்தியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். உஜ்ஜயின் மக்களுக்கு  புராதனகாலத்தல் எற்பட்ட துன்பத்தின் போது, சிவன் நிலத்தை பிளந்து கொண்டு வந்து மக்களை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரதான தெய்வமாக இங்கேயே குடி கொண்டார். நித்திய மோட்சத்தின் இருப்பிடமாக மகேசன் இங்கு அருள்பாலிக்கிறார்.

சக்திபீடம்.








18 மகாசக்திபீடங்களில் ஒன்றாக அம்பாள் சங்கரி இங்கு வீற்றிருக்கிறார். 

அம்மனின் மேல் உதடு விழுந்த இடமாக இந்த உஜ்ஜயின் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் ஒன்னறை லெட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் வருவதாக இந்த கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

மகாகவி காளிதாஸ்.















இவர் ஒரு சமஸ்கிருத மொழிப்புலவர்.  உஜ்ஜயின் காளிதேவியின் அருள் கிடைத்ததாலேயே இவர் பண்டிதர் ஆனார் என்று வரலாறு கூறுகிறது. மேகதூதம் என்ற காவியத்தில் உஜ்ஜயின் பற்றி குறிப்பிட்டுள்ளார். 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று அறியப்படுகிறது.

காலbaiரவர் 


Shipra River


உஜ்ஜயின் நகரத்தின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...