அகமதாபாத் நகரம் ஒருநாள் சுற்று பயணம். (23.2.2024).
சபர்மதி ஆசிரமம்.
சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஆசிரமம். இதன் காரணமாகவே சபர்மதி என்ற பெயர் பெற்றது. மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட ஆசிரமம், என்பதால் காந்தி ஆசிரமம் என்ற பெயருடனும் அழைக்கப்டுகிறது. வரலாற்று நிகழ்வு புகைப்படங்கள் காட்டேஜ் இன்டஸ்ரி, காந்திஜியின் வாழ்கை வரலாறுகளை இங்குகாணலாம்.
சபர்மதி ஆறு.
ராஜஸ்தான் மாநிலம் உதயாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரவல்லி மலையில் உற்பத்தியாகி, குஜராத் மாநிலத்தில் ஆறாக ஓடி, அரபிக் கடலில் உள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது.
317கி;மீ நீளம் உள்ள இந்த நதியை, சபர்மதி நதிநீர் திட்டத்தின் மூலம் திரு. நரேந்திரமோடி அவர்களின் பெரும் முயற்சியால், நியூயார்க், லண்டன, சிங்கப்பூர் நதிகளுக்கு ஒப்பாக, சிறந்த சுற்றுலாதலமாகவும், வற்றாத ஜீவநதியாகவும் உருவாகியுள்ளது.
புகைப்படமும் கானொளியும் இதன் உண்மைதன்மையை உங்களுக்கு எதிரொலிக்கும்.
ஜெயின் கோவில்.
1848 ஆம் ஆண்டு Hutheesing குடும்பத்தரால் கட்டப்பட்டது. கோவில் கட்டும் காலத்தில் அரசர் அசரின் 49 வது வயதிலேயே காலமானர். இதன் காரணமாக அவரின் மனைவி, ஹரகுன்வர்; என்பவர் இந்த இறைப்பணியை முடித்துவைத்தார். “பிரேம்சந்த்சாலத்” என்பவர் கட்டிட கலைஞர். Hutheesing குடும்ப அறக்கட்டளை தற்பொழுது இக்கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.
சித்திசையத் மசூதி.
“ஹப்ஷி பிரபு சிடியாத்” என்பவரால் 1572-73 ஆண்டு கட்டப்பட்டது. பிரபுவாக இருந்தும் மக்கள் பசியகல, பெரிய சமையல்அறை வருவாக்கி உணவு அளித்துவந்தார். ஹஜ் பயணத்திறக்கும் மக்களுக்கு உதவிவந்தார். இந்த மசூதி கட்டிட கலையில் சிறப்புற்று விளங்குகிறது. ஒரு கற்றலி வேலை பாட்டில் உள்ள ஒரு மரம் போன்ற வடிவம். ஆகமதாபாத் ஐ.ஐ.எம்.லோகாவாக (Ahmedabad I.I.M. logo) உள்ளது.
சர்தார் வல்லபபாய் படேல் மெம்மோரியல் ஹால்.
“மோதி ஷாஹி மஹால்” என்று 1616-1623 –ல் ஷாஜஹானால் கட்டப்பட்ட அரண்மனையே தற்பொழுது, மெம்மோரியல் ஹாலாக செயல்படுகிறது. நீருற்று, மரம், தோட்டம் என்று மிக எழிலுடன், காட்சி தருகிறது. குஜராத் மாநிலத்தின் வரலாற்று நிகழ்வுகள் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் மற்றும் ஒலிஒளி வடிவ காட்சிகள் என்று பல சிறப்புடன் இந்த காட்சியகம் விளங்குகிறது.
ரூடாபாய் ஸ்டெப்வெல்.
1498-ல் ராயாவீர் சிங் என்பவரின் நினைவாக அவரது மனைவி ரூடாதேவி, என்பவால் கட்டப்பட்டது. காந்திநகர் அருகில், அதலாபாத் என்ற கிராமத்தில் இந்த கிணறு அமைந்துள்ளது. சமையல், குடிநீர் மற்றும் வழிபோக்கர்கள் விலங்குகள் என்று உயிரினங்களுக்கு பெரும் உதவியாக அமைந்தது இந்த கிணறு.
சிப்ரி மசூதி மற்றும் கல்லறை.
இந்த மசூதி 1514-ல் ராணி சிப்ரி என்பவரால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் இந்து மதம், சமண மத கட்டிட கலையுடன் ஒத்தும், மதநல்லினக்கத்துடனும்; இருப்பதாக கூறப்படுகிறது.
அட்சர்தாம்.
நாராயணகுருவால் உருவாக்கப்பட்ட கோவில், வடநாட்டில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பல அட்சர்தாம்கள் உள்ளது. நாராயண குரு குஜராத்மாநிலத்தவர் என்பதால் காந்தி நகரில் பிரமிப்பூட்டும் அட்சர்தாம் அமைந்துள்ளது. நம் நாட்டில் உள்ள அட்சர்தாமகளில் இதுவே முதலிடம் பெருகிறது. (புகைப்படம் அனுமதி கிடையாது.)
No comments:
Post a Comment