நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-2
13.3.2024 – (நாள் இரண்டு). ஓம்கார்.
13.3.2024 – (நாள் இரண்டு). ஓம்கார்.
நர்மதாபுரத்தில் இருந்து, ஓம்கார் என்ற இடத்திற்கு சென்றோம். இந்த இடமே ஓம்கார் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள நர்மதைநதியின், இரு கரையிலும், ஓம்காரேஷ்வர் மற்றும் மமலேஷ்வர் என்ற இரண்டு ஜோதிர்லிங்க சிவன் கோவில்களை கொண்டுள்ளது. ஓம்காரேஷ்வர் என்ற கோவில் சிவ புரி என்ற ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. இந்த தீவை நாம் வானத்தில் இருந்து பார்த்தால், ஓம் வடிவமாக தெரியும். மேற்கில் நர்மதா நதியும், வடக்கில் விந்திய மலையும், தெற்கில் சத்பூரா காடுகளும், இந்த இடத்தை ரம்யமாக்குகின்றன. ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதால் எங்கள் நர்மதா பரிக்ரமா விதிக்குட்பட்டு , ஓம்காரேஸ்வரரை தரிசிக்கவில்லை.
மமலேஷ்வர்.
நர்மதை ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ள கோவில். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. இந்த படித்துறையில் ஸ்நானம் செய்து, பூஜை செய்து மமலேஸ்வரரை வழிப்பட்டோம்.
வரலாறு.
ரகு வம்சம் என்ற குலத்தில் பிறந்த ஸ்ரீராமனின் வம்சத்தில் மாந்தாதா என்ற அரசர் இங்கு தவம் புரிந்து பரமேஸ்வரனுக்கு இந்த கோவிலை எழுப்பினார் என்று கூறப்படுகிறது
விந்திய பர்வதம் எனக்கு நிகர் யாரும் இல்லை என்று நாரதரிடம் தெரிவித்தது. நாரதர் மேரு மலையை விட நீ குறைந்தவன் என்று கூறினார். உடனே விந்திய பர்வதம் மனம் நொந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தொடங்கியது. சிவபெருமான் பிரசன்னம் அடைந்த உடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து எனக்கு நல்ல புத்தி கூர்மையை கொடு என்று வேண்டிக்கொண்டது. என் தலைமேல் நீங்கள் எப்பொழுதும் வீற்றிருக்க வேண்டும் என்றும் விந்திய மலை இறைவனிடம் கூறியது. இதன் காரணமாகவே பிரணவ வடிவில் ஓம்காரராகவும், நர்மதை ஆற்ங்கரையில் மமலேஸ்வரராகவும் ஈசன் அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment