நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-4.
16.3.2024 நாள் ஐந்து. பரூச் மற்றும் (கட்பூர்)
இந்த இடத்தில் தான் நர்மதை ஆறு, அரபிக்கடலில் சங்கமிக்கிறது. இந்த இடம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த சங்கமம் ரத்னாகர் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. திதியை ஒட்டி கடல் உட்பக்கம் வரும். கடல் உள்ளே வந்தவுடன் தான் படகில் பயணிக்கமுடியும். பயணித்த நாள் ஷஷ்டி இதன் காரணமாக காலை 6மணிக்கே நீர் வந்துவிட்டது. இந்த இடம் நர்மதைநதியின் பாதங்களாக கருதி வழிபடப்படுகிறது.
கட்பூர்.
இந்த ஊர் மிகவும் சிறிய கிராமம். இங்கு தங்குவதற்கு வசதிகள் கிடையாது. இந்திய தொழிலதிபர் பிர்லா குடும்பத்தை சேர்ந்தவர்கள் இங்கு நர்மதை யாத்திரிகளுக்கு பொது சத்திரம் அமைத்துள்ளனர். பொது சத்திரத்தில் தங்க வேண்டும் என்பதை கேட்ட உடன் அதிர்ந்தேன். ஆனால் ஆண்கள், பெண்கள், என்று இருபாலாருக்கும் தனி தனியாக தளங்கள். தங்கும் இடத்தில் இருந்து சன்று தள்ளி குளியல்அறை, கழிவறை, கைஅலம்ப, பல்துலக்க வாஷ்பேசின், என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனி இடங்கள். குறிப்பாக காப்பி, டீ, தின்பண்டங்பள், உணவு பொருட்கள் என்று எதுவுமே உள்ளே அனுமதி கிடையாது. என்று பல விதிகளுக்கு உட்பட்டு மிகவும் தூய்மையாக இருந்தது எனக்கு மட்டட்ற மகிழ்சியளித்தது. பாதுகைகளை பாதுகாக்க தனி இடம். குறிப்பாக பாதயாத்திரையாக வரும் நர்மதா யாத்திரிகளுக்கு முன் உரிமை வழங்கினர். நன்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். என்று மிக அற்புதமாக பராமரித்து வருகின்றனர்.
படகுசவாரி.
கட்பூர் என்ற இடத்தில் இருந்து, ஒரு 5 கி.மீ. காரில் பயணம் செய்து, கடற்கரையை சென்றடைந்தோம். அங்கு சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்து படகில் சென்றோம். இந்த படகு சவாரிக்கு மிக குறைந்த கட்டணமே பெறப்படுகிறது. இரண்டு மணிநேரம் படகில் பயணம் செய்து நாங்கள் பரூட்ஜ் என்ற இடத்தை அடைந்தோம். நர்மதை ஆறு கடலில் கடக்கும் இடம் வரை சென்று, பரூட்;ஜ் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். பாதயாத்திரையாக பரிக்ரமா செய்பவர்களுக்கு, கட்டணம் கிடையாது. குஜராத் மாநில அமைச்சர் ஒருவர் எங்களுடன் படகில் பயணம் செய்தார். அவர் எந்த விதமான சிறப்பு சலுகையும் இல்லாமல், (பெறப்படாமல் (அ) எதிர்பார்காமல்) எங்களை போன்று சாதாரண பரிக்ரமா வாசியாக பயணம் செய்தார். நாங்கள் குப்பியில் (பித்தளை வாட்டர் பாட்டிலில்) நர்மதாபுரத்தில் பிடித்து வைத்து பூஜித்த நர்மதை நீரை இங்கு சிறிதளவு கடலில் ஊற்றி வழிபட்டோம்.
சுவாமி நாராயணகுரு தங்கும் இடம்.
பரூட்ஜில் நாங்கள் இங்குதான் தங்கினோம். குஜராத் மாநிலத்தில் அட்சர்தாம் கோவில் அதிகமாக உள்ளது. தங்கும் இடத்திலும், நன்றாக பராமரிப்பு இருந்தது. காபி, டீ, உணவுபொருட்கள், தின்பண்டங்கள் அனுமதி மறுப்பு இருந்தது.
இந்த படித்துறையில் குளிக்க வசதியின்னை காரணமாக பலர் நர்மதையில் நீராடவில்லை. நீல்கண்ட் மகாதேவரரை வழிபட்டோம்.
No comments:
Post a Comment