நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-3.
14.3.2024. (நாள் மூன்று) பார்வனி.
பரிஷித் மகாராஜா மகன் ஜெனமே ஜெயன், அவன் அப்பாவை தட்சகன் என்ற பாம்பு தீண்டியது காரணமாக ஒரு யாகம் செய்து அதில் அனைத்து பாம்புகளும் வந்து விழுந்து உயிரை விடும்படி செய்தான். இதன் காரணமாக அஸ்திபன் என்ற மகரிஷி வந்து இந்த யாகத்தை ஜெனமே ஜெயனிடம் பேசி நிறுத்தினார். இந்த அஸ்திபன் என்ற மகரிஷி பிறந்த இடம் பார்வனி. ஜகத்காரு என்ற மாபெரும் புனிதருக்கும் நர்மதையின் தமக்கைக்கும் திருமணம் நடந்த இடம், என்று பல வரலாற்று சிறப்புகளை கொண்டது இந்த பார்வணி. நாகேஷ்வர் மாகாதேவ் என்ற சிவன் கோவில் நாங்கள் சென்ற நர்மதை ஆற்றங்கரைக்கு எதிரில் உள்ளதால். நாங்கள் இந்த மகேஸ்வரரை தரிசனம் செய்யவில்லை.
15;.3.2024 (நாள் நான்கு) ப்ராகாசா.
இந்த இடம் ஒரு திரிவேணி சங்கமம். கோமதி, தபதி, அந்தர்வாகிணியாக சரஸ்வதி நதி இந்த மூன்றும் சங்கமிக்கும் இடமாக இந்த ப்ரகாசா அமைந்துள்ளது. இந்த இடம் மகாராஷ்ட்ரா மாநலத்தில் உள்ளது. தபதி என்பது நர்மதையின் கிளைநதியாகும். இந்த நதிக்கரையில் இருக்கும் சிவனுக்கு சங்கமேஸ்வரர் என்று பெயர். ராமர், சீதை, லெஷ்மணர் இந்த நதிக்கரையில் தசரதனுக்கு பிண்ட பிரதானம் கொடுத்தனர். இந்த இடத்தில் குளித்தால் நம் வாழ்வில் துர்மரணம் சம்பவிக்காது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மும்மலங்களையும் அடக்ககூடிய சக்தி இங்கு நீராடினால் கிடைக்குமாம்.
No comments:
Post a Comment