ஜோத்பூர் பயணம்

 ஜோத்பூர் பயணம். (4, 5, 6.3.2024)

மெஹ்ரங்கர் கோட்டை. (Mehrangarh Fort)
















ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜோத்பூர். இம் மாநிலத்தில் உள்ள சில ஊர்கள் சில சிறப்பு பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.

ஜெய்பூர்- பிங்சிட்டி ,உதய்பூர்- லேக்சிட்டி, ஜோத்பூர்- புளுசிட்டி என்று அழைக்கப்படுகிறது. 

கோட்டை சிறப்பு.



400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை, 1,200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜபுத்ர வம்ச அரசர் “ராவ் ஜோதாவால்”; என்பவரால் 1459 ஆம் ஆண்டு இந்த கோட்டையை கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு முதல் இவரது வம்சாவழியினர் தொடந்து இந்த கோட்டையை புதுப்பித்துக் கொண்டே இருந்தனர்.

ஜஸ்வந்தடா.(Jaswant Thada)

















இது ஒரு கல்லறை. மகாராஜா சர்தார் சிங் என்பவர், 1899 ஆம் ஆண்டு, அவரது தந்தை இரண்டாம் ஜஸ்வந்த் நினைவாக கட்டினார் ராவ் ஜோடாஜி  சிலை இங்குள்ளது.

Our stay

உமைடு பவன் அரண்மனை. (Umaid Bhawan Palace)













இது ஒரு தனியாரின் அரண்மனை.  "காஜ் சிங்" என்பவருக்கு உரிமையானது. 1929-ல் தொடங்கி,  1943-ல் இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அரண்மமையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டலால் நிர்வகிக்கப்படுகிறது. காஜ்சிங் என்பவரின் பாட்டனார் "உமைத் சிங்". இதன் காரணமாக அவரின் பாட்டனார் பெயரிலேயே இந்த அரண்மனை அமைந்துள்ளது. அருங்காட்சியகமும் இங்குள்ளது.

மாண்டோர்  தோட்டம். (Mandore Garden)











































ஜோத்பூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மிக பழமையான நகரம். 6 ஆம் நூற்றாண்டின் மாண்டவ் என்பவரின் தலைநகரமாக இருந்தது. பழமையான கட்டிடங்கள் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளன. நான் பகிரும் புகைப்படங்கள் இதை உங்களுக்கு உணர்த்தும்.

கிளாக்டவர் மற்றும் பஜார். (Clock Tower and Bazar)

"கண்டா கர்" என்று ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. மகாராஜா சர்தார் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இதனை சுற்றி ஒரு வணிக வளாகம் உள்ளது.  ஒரு கோட்டை  நான்கு பக்கமும் வாயில்கள் உள்ளன. நடுவில் இந்த மணிகூண்டு அமைந்துள்ளது. இதை சுற்றி வியாபாரம் சிறப்பாக நடை பெறுகிறது.

படிக்கிணறு. (Step-Well)




18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கிணறு. மக்கள் நீர் உபயோகத்திற்காக கட்டப்பட்டது. தற்பொழுது சுற்றுலா தலமாகவும், பாரம்பரிய கட்டிட கலைக்கு உதாரணமாகவும், அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

எங்கள் பயணம்.

ஜோத்பூரில் பல இடங்கள் பார்த்து மகிழ உள்ளன. வெளிநாட்டினரின் வருகை அதிகம். மேலே குறிப்பிட்டுள்ள இடங்கள், நாங்கள் இரண்டுநாட்கள் என்று தீர்மானித்து பார்த்த இடங்கள். உதய்பூரில் இருந்து 4 மணிநேரம் பஸ் பயணம். நாங்கள் மீண்டும் உதய்பூருக்கு புகைவண்டியில் பயணித்தோம். ஜோத்பூரில் இருந்து 3 கி;மீ; தொலைவில் உள்ள “பகத்கி கோத்தி” என்ற ரயில் நிலையத்தில் இருந்து பில்வாரா ரயில் நிலையம் வரை வந்து. பில்வாராவில் இருந்து உதய்பூருக்கு பிரயாணித்தோம் 


இந்த  “பகத்கி கோத்தி” என்ற ரயில் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டிற்கு ரயில் சென்று கொண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ரயில் நிலையத்தை பார்க்க நாங்கள் இவ்வாறு எங்கள் பயணத்தை முடிவு செய்தோம். 

 










No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...