நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-5.

 நர்மதா பரிக்ரமா (12.3.2024 முதல் 24.3.2024-வரை) பகுதி-5.

17.3.2024,  (நாள் ஆறு) மகேஷ்வர்.


மகேஷ்வர் சிறப்பு.














ஜமதக்னி முனிவர் ஆசிரமம் இருந்த இடம். கற்புக்கரசி ரேணுகா தேவி மும்முர்திகளுக்கும் தாயாக பாலூட்டிய இடம். அகல்யாபாய் என்ற ராணி சிவபெருமானுக்காக ஒரு அரண்மனையே கட்டியுள்ளார். இங்கு தினமும் ஸஹஸ்ரலிங்கம் (1000 லிங்கம்) செய்து நீரில் கரைக்கின்றனர். இந்த (களிமண்) லிங்கம் நீர்நிலை பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. இன்றளவும் இந்த செயல் செயல்படுத்தப்படுகிறது. 

அகல்யாபாய் 













































அகல்யாபாய் என்ற இந்த ராணியின் கணவர் போரில் உயிர் துறக்கிறார். உடனே அவர் உடன்கட்டைஏற முடிவுசெய்கிறார். ராணியின் மாமனார் அவரை தடுத்து நிறுத்தி, ஆட்சிபொறுப்பை ஏற்க வைக்கிறார். 25 ஆண்டுகள் மட்டுமே ராணியாஇல்லாமல் ஒரு துறவியாக ஆட்சி செய்து, பல சாதனைகளை படைக்கிறார் அகல்யாபாய் அம்மையார். இந்தோர் விமான நிலையம் இவர் பெயரிலேயே இயங்குகிறது. இந்தோர் என்ற நகரத்தை உருவாக்கிய பெருமை இவரையே சேரும். இந்த தகவல்கள் இந்தோர் அரண்மனையில் நாங்கள் அறிந்து கொண்டோம். இந்தியா முழுவதும் 720 கோவில்கள் புனரமைப்பு செய்துள்ளார். இவ்வாறு பல சிறப்புகளை கொண்டது இந்த மகேஷ்வர்.  இந்த படித்துறைக்கு அகல்யாபாய் காட் என்று பெயர். மகேஷ்வர் என்ற சிவபெருமான் ஆலயம்,  மற்றும் நர்மதை ஆற்றங்கரையில் பல இறை சன்னதிகள். பெரிய கோட்டை. மிக ரம்யமான, பெரிய படித்துறை என்று மிக அற்புதமாக காட்சியளித்தது இந்த மகேஸ்வர்.





No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...