மத்யப்பிரதேச மாநிலத்தில் உள்ள நகரம். நர்மதாபுரத்தில் இருந்து உதைப்பூர் செல்ல இந்தோர் ஒரு வழியாக அமைந்ததால், இந்த நகரத்தையும் சுற்றிபார்க முடிவு செய்தோம்.
அண்ணபூர்னா கோவில்
இந்த அண்ணனபூர்னா கோவில் மிகவும் பழமைவாய்ந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், 1959 ஆம் ஆண்டு மீண்டும் மகாமந்தேஷ்வர்சாம் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோவிலின் பிரதான வாயில் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
ரன்ஜித் ஹனுமார் மந்திர்.
நல்ல இயற்கை சூழலில் அமைந்த ஒரு ஆஞ்சநேயர் கோவில். இந்தோர் மக்களுக்கு ஒரு சிறப்பு நாட்களுக்கு எளிதாக செல்ல கூடிய கோவிலாக உள்ளது.
கஜ்ரானா கணேஷ் கோவில்.
மராட்டிய இளவரசி அகல்யாபாய் என்பவரால் கட்டப்பட்டது. இந்தோர் மக்களால் மிகவும் போற்றப்படுகிறகோவில். பல பணம் படைத்த மக்கள் இந்த கோவிலுக்கு அதிக விமைதிப்புபள்ள கற்கள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வழங்கியுள்ளனர்.
ராஜ்வாடா பேலஸ்.
இருநூரு ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய மன்னர்களான ஒல்கர்களால் கட்டப்பட்டது. ஏழு அடுக்குகளை கொண்டது. 1814 அடி உயரம் கொண்டது இந்த அரண்மனை.
கிருஷ்ணபுராசத்ரி
அரச குடும்பத்தினரின் கல்லரையாக உள்ளது. இது ராஜ்வாடா அரண்மனையில் இருந்து, 500மீ தொலைவில் உள்ளது. கட்டிட கலைக்கு உதாரணமாக சிறப்புற்று விளங்குகிறது. புகைப்படம் கட்டிட கலை சிறப்பை உங்களுக்கு விளக்கும்.
பிஜாசன் மாதா மந்திர்.
சுற்று உயரத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில். இந்தோர் விமானநிலையம் அருகில் அமைந்துள்ளது,